நேரத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

நேரத்தைப் பற்றிய பொன்மொழிகள்

Time

நம் வாழ்க்கை நேரத்தால் (Time) ஆனது. அதனால் அது வரையறுக்கப்பட்டது, நாம் வாழும் இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது. காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. எனவே அந்த விலைமதிப்பற்ற நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நம் வெற்றியே அடங்கியுள்ளது.

நாம் இழந்தால் பெறமுடியாத விலைமதிபற்ற செல்வம் நேரம். ஆனாம் நாம் அதை சரியாகப் பயன்படுத்துகிறோமா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. காலமும் வயதும் கடந்து சென்றுகொண்டே இருக்கும் அதை தடுத்து நிறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது.

நம்மால் முடிந்ததெல்லாம் நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது மட்டுமே. வீணான நேரம் வீணானதாகவே இருக்கட்டும், இனிவரும் நேரத்தையாவது சிறப்பாகப் பயன்படுத்துவோம். காலம், இடம் அறிந்து ஒருவன் செயற்பட்டால் ஒருவனுக்கும் இந்த உலகமே வேண்டும் என்று கேட்டால் கூட கிடைக்கும் என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க காலத்தை வென்று சரித்திரம் படைப்போம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Time quotes in Tamil


  • நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது. --ஜோனதன் எஸ்ட்ரின்


  • நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. --ஹார்வி மேக்கே


  • பொறுமையும் நேரமும் இரண்டு மிகவும் சக்திவாய்ந்த போர்வீரர்கள். --லியோ டால்ஸ்டாய்


  • ஒரு மனிதனால் செலவிடக்கூடிய மிகவும் மதிப்புமிக்க விடயம் நேரம். --தியோபிராஸ்டஸ்


  • உங்கள் ரோஜாவுக்காக நீங்கள் செலவழித்த நேரமே உங்கள் ரோஜாவை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. --அந்துவான் து செயிந் தெகுபெறி


  • சிக்கல் என்னவென்றால், உங்களுக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். --ஜாக் கோர்ன்ஃபீல்ட்


  • உங்கள் 24 மணிநேரத்தை மாற்றினால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவீர்கள். --எரிக் தாமஸ்


  • காலம் விடயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் தான் அவற்றை மாற்ற வேண்டும். --ஆண்டி வார்ஹோல்


  • நேரம் என்பது ஒரு மாயை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


  • நேரம் என்பது இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள மிக நீண்ட தூரம். --டென்னசி வில்லியம்ஸ்


  • நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். --ஜே. ஆர். ஆர். டோல்கீன்


  • நாம் நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும், ஊன்றுகோலாக அல்ல. --ஜான் எஃப். கென்னடி


  • ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட மூன்று மணிநேரம் முன்கூட்டியே செல்வது சிறந்தது. --வில்லியம் ஷேக்ஸ்பியர்


  • தவறவிட்ட நேரத்தை திரும்பப் பெறமுடியாது. --பெஞ்சமின் பிராங்க்ளின்


  • ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். --சார்லஸ் டார்வின்


  • எங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ்


  • பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது. --நெல்சன் மண்டேலா


  • உண்மையில் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே மூலதனம் நேரம் தான், மேலும் அவன் இழந்தால் பெற முடியாத ஒரே விடயம் நேரம். --தாமஸ் அல்வா எடிசன்


  • நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்


  • நேரம் தடையின்றிச் செல்கிறது. நாம் தவறு செய்யும் போது, கடிகாரத்தைத் திருப்பி மீண்டும் முயற்சிக்க முடியாது. நம்மால் செய்யக்கூடியது நிகழ்காலத்தை நன்றாகப் பயன்படுத்துவது தான். --தலாய் லாமா


  • வேலை செய்வதற்கு ஏற்ற மிகவும் அமைதியான நேரம் இரவு. இது சிந்தனைக்குத் துணைபுரிகிறது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்


  • நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும். --லியோனார்டோ டா வின்சி


  • நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது. --பெஞ்சமின் பிராங்க்ளின்


  • இழந்த செல்வத்தை உழைப்பால் திரும்பப் பெறலாம், இழந்த அறிவை படிப்பால் திரும்பப் பெறலாம், இழந்த ஆரோக்கியத்தை பத்தியம் அல்லது மருத்துவத்தால் திரும்பப் பெறலாம், ஆனால் இழந்த நேரம் என்றென்றும் இழந்ததுதான். --சாமுவேல் ஸ்மைல்ஸ்


  • உங்கள் நேரத்திற்கு ஒரு வரையறை உண்டு. ஒவ்வொரு கணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். --மார்கஸ் அரேலியஸ்


  • நாம் சொல்வதிலும் செய்வதிலும் பெரும்பாலானவை அவசியமற்றவை. உங்களால் அதை தவிர்க்க முடிந்தால், உங்களுக்கு அதிக நேரமும், அதிக அமைதியும் கிடைக்கும். ஒவ்வொரு கணமும் "இது அவசியமானதா" என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். --மார்கஸ் அரேலியஸ்



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.