ரவீந்திரநாத் தாகூரின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ரவீந்திரநாத் தாகூரின் பொன்மொழிகள்

Rabindranath Tagore

இந்தியாவின் கொல்கத்தவைச் சேர்ந்த உலகப்புகழ் மிக்க கவிஞரும், நாடக ஆசிரியரும், ஓவியரும், இசையமைப்பாளரும் மற்றும் தத்துவஞானியும் தான் ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore). மேலும் இந்தியாவின் தேசியகீதத்தை  இயற்றியவரும் இவரே.  தனது கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பிற்காக 1913 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் வென்றுள்ளார்.

மேலும் ஆசியாவிலேயே முதன் முதலில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற பெருமை இவரயே சாரும். மேலும் இந்திய விடுதலைக்காக ஓவியங்கள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் பிரித்தானிய அரசுக்கு எதிராக போராடினார் இரவீந்திரநாத் தாகூர். கீதாஞ்சலி, சோக்கர் பாலி, கோரா போன்றவை இவரது பிரபலமான படைப்புகளில் சிலவாகும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Rabindranath Tagore quotes in Tamil


  • வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.


  • மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்.


  • என்னால் ஒரு கதவு வழியாகச் செல்ல முடியாவிட்டால், நான் வேறொரு கதவு வழியாகச் செல்வேன், அல்லது நான் ஒரு கதவை உருவாக்குவேன்.


  • தான் நடும் மரங்களின் நிழலில் தான் ஒருபோதும் உட்கார மாட்டார் என்று தெரிந்தும் மரங்களை நடுபவர், குறைந்தபட்சம் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்.


  • ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை.


  • கடவுளின் பாதத்தில் பூக்களை வைக்க கோவிலுக்குச் செல்லாதீர்கள், முதலில் உங்கள் சொந்த வீட்டை அன்பின் வாசனையால் நிரப்புங்கள், கடவுளின் பலிபீடத்தின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க கோவிலுக்குச் செல்லாதீர்கள், முதலில் உங்கள் இதயத்திலிருந்து பாவ இருளை அகற்றுங்கள். தலை குனிந்து பிரார்த்தனை செய்ய கோவிலுக்குச் செல்லாதீர்கள், முதலில் சக மனிதர்கள் முன் பணிவாக தலை வணங்கக் கற்றுக்கொள்ளுங்கள்.


  • ஒரு மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான பாடம், இந்த உலகம் வலி நிறைந்தது என்பது அல்ல, அதை மகிழ்ச்சியாக மாற்றுவது அவனால் சாத்தியமாகும் என்பதேயாகும்.


  • நட்சத்திரங்கள் மின்மினிப் பூச்சிகளைப் போல தோற்றமளிக்க பயப்படுவதில்லை.


  • வாழ்க்கை என்பதே ஒரு விசித்திரமான கலவைதான். நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், பின்னர் அதை மேம்படுத்த வேண்டும்.


  • உங்கள் வாழ்க்கையில் சூரியன் மறைந்துவிட்டது என்று நீங்கள் அழுதால், உங்கள் கண்ணீர் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைத் தடுத்துவிடும்.


  • நான் ஆறுகள் மற்றும் மலைகளைப் பார்க்க உலகம் முழுவதும் பயணம் செய்தேன், நான் நிறைய பணம் செலவழித்தேன், நான் நீண்ட தூரம் சென்றேன், எல்லாவற்றையும் பார்த்தேன், ஆனால் என் வீட்டிற்கு வெளியே உள்ள புல்லின் மீதுள்ள ஒரு பனித்துளியைப் பார்க்க மறந்துவிட்டேன். ஒரு பனித்துளி உங்களைச் சுற்றியுள்ள முழு பிரபஞ்சத்தையும் அதன் குவிப்பில் பிரதிபலிக்கிறது.


  • நட்பின் ஆழம் பழக்கத்தின் அளவைப் பொறுத்தது அல்ல.


  • கடவுள் தனது கோயில் அன்பினால் கட்டப்படுவதற்காகக் காத்திருக்கும் பொழுது, மனிதர்கள் கற்களைக் கொண்டு வருகிறார்கள்.


  • பலவீனமானவர்கள்தான் பயங்கரமானவர்களாக இருக்க முடியும், ஏனெனில் அவர்கள் வலுவானவர்களாக தோற்றமளிப்பதற்கு ஆவேசமாக முயற்சி செய்கிறார்கள்.


  • விடியற்காலை இன்னும் இருட்டாக இருக்கும்போதும் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை.


  • உங்கள் சொந்த ஆன்மாவில் நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும் வரை, இந்த முழு உலகமும் உங்களுக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றும்.


  • முள் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அதை எடுக்க முடியும்.


  • ஒரு பெண்னின் இயல்பில் மிகப்பெரிய மாற்றங்கள் காதலால் ஏற்படுகின்றன, ஒரு ஆணின் இயல்பில் மிகப்பெரிய மாற்றங்கள் இலட்சியத்தால் ஏற்படுகின்றன.


  • காதல் ஒரு முடிவற்ற மர்மம், ஏனெனில் அதை விளக்கக்கூடிய நியாயமான காரணம் எதுவும் இல்லை.


  • அளவுக்கு மீறிய ஆசைகளை கைவிடுவதே ஆகச்சிறந்த செல்வமாகும்.


  • இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம்.


உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.