மகாத்மா காந்தியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
இந்திய விடுதலைக்காக அகிம்சை முறையில் போராடியவரும், இந்திய சுதந்திரப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தியவரும் தான் மகாத்மா காந்தி (Mahatma Gandhi). குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi) என்பதாகும்.
காந்தி இங்கிலாந்தில் பாரிஸ்டர் (barrister) எனப்படும் படிப்பை முடித்த வழக்கறிஞர் ஆவார். காந்தி தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களே அவர் ஒரு மாபெரும் தலைவராக உருவாக காரணமாக இருந்தது. மகாத்மா காந்திக்கு "மகாத்மா" எனும் கௌரவ பட்டத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Mahatma Gandhi quotes in Tamil
- கூட்டத்தில் நிற்பது எளிதானது ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.
- பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும்.
- மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக்கொள்வது.
- நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களைக் கொன்றுள்ளது.
- நேற்றைய தோல்விகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், இன்றைய வெற்றிகள் குறைவாகவே இருக்கும். நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்.
- நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள்.
- உறவுகள் நான்கு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை: மரியாதை, புரிதல், ஏற்றுக்கொள்ளல் மற்றும் பாராட்டு.
- உங்களை நீங்களே கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களுக்கான சேவையில் உங்களை நீங்களே இழப்பதுதான்.
- உங்கள் செயல்களினால் வரும் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், எந்த விளைவும் இருக்காது.
- உண்மையாகவும், கனிவாகவும், அச்சமற்றவராகவும் இருங்கள்.
- நீங்கள் சரியாக இருக்கும்போது, நீங்கள் கோபப்பட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் தவறாக இருக்கும்போது, உங்களுக்கு கோபப்பட உரிமை இல்லை.
- எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை.
- நாளைக்காக சிந்தியுங்கள் ஆனால் இன்றைக்காக செயல்படுங்கள்.
- மனிதகுலத்தின் மகத்துவம் மனிதனாக இருப்பதில் இல்லை, மனிதாபிமானமாக இருப்பதில் உள்ளது.
- உறுதியான மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட ஒரு சிறிய குழுவால் வரலாற்றின் போக்கையே மாற்ற முடியும்.
- நீங்கள் என்னை சங்கிலியால் பிணைக்கலாம், நீங்கள் என்னை சித்திரவதை செய்யலாம், நீங்கள் இந்த உடலை கூட அழிக்கலாம், ஆனால் உங்களால் ஒருபோதும் என் மனதை சிறைப்படுத்த முடியாது.
- இந்த ஆண்டில் நம்மால் எதுவும் செய்ய முடியாத இரண்டு நாட்கள் உள்ளன: நேற்று மற்றும் நாளை.
- நான் யாரையும் அவர்களின் அழுக்கு கால்களால் என் மனதில் நடக்க விடமாட்டேன்.
- ஒவ்வொரு வீடும் ஒரு பல்கலைக்கழகம் மேலும் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்கள்.
- உங்கள் அனுமதியின்றி மக்களால் உங்களை புண்படுத்த முடியாது.
- மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள். மனிதநேயம் என்பது ஒரு கடல், கடலின் சில துளிகள் அழுக்காக இருப்பதால், கடல் அழுக்காகாது.
- மனிதகுலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி.
- பிரபஞ்சத்தில் ஒரு சக்தி உள்ளது, அதை நாம் அனுமதித்தால், அது நம் வழியாகப் பாய்ந்து அற்புதமான விளைவுகளை உண்டாக்கும்.
- பத்திரிகையாளர் நடமாடும் கொள்ளை நோயாக ஆகிவிட்டார். அவர் பொய்கள் மற்றும் அவதூறுகள் எனும் தொற்றுநோயை பரப்புகிறார்.
- கோபம் அகிம்சையின் எதிரி, அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன்.
- எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.
- ஒரு நாட்டின் மகத்துவத்தை அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிட முடியும்.
- நீங்கள் ஒரு எதிரியை எதிர்கொள்ளும் போதெல்லாம். அவரை அன்பால் வெல்லுங்கள்.
- மதத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு மதம் என்றால் என்னவென்றே தெரியாது.
- நீங்கள் நாளையே இறந்துவிடுவீர்கள் என்பது போல வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என்பது போல கற்றுக்கொள்ளுங்கள்.
உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.