எமிலி டிக்கின்சனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
எமிலி டிக்கின்சனின் பொன்மொழிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த சில முக்கியமான மற்றும் பிரபல கவிஞர்களில் ஒருவர் தான் எமிலி டிக்கின்சன் (Emily Dickinson). மேலும் இவர் தனது வாழ்நாளில் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதியுள்ளார்.
எமிலி டிக்கின்சன் வாழ்ந்த காலத்தில் அவரது ஒரு சில கவிதைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இவர் மறைந்து பல வருடங்களுக்குப் பிறகே இவரது கவிதைகள் வெளியாகி மக்களிடமும் வரவேற்பைப் பெற்றன.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Emily Dickinson quotes in Tamil
- உண்மை மிகவும் அரிதானது, ஆகவே அதைச் சொல்வது மிகவும் மகிழ்ச்சிகரமானது.
- கற்றுக் கொண்டே இருக்கும் வரை உங்களால் இளமையாக இருக்க முடியும்.
- தொலைதூரம் பயணம் செய்வதற்கு, ஒரு புத்தகத்தை விட சிறந்த கப்பல் இங்கே இல்லை.
- மாலுமியால் வடக்குத் திசையை அறிய முடியாது, ஆனால் திசைகாட்டியால் அறிய முடியும் என்று அவருக்குத் தெரியும்.
- இந்த உலகில் ஒரு வார்த்தைக்கு நிகரான சக்திமிக்க எதையும் எனக்குத் தெரியாது.
- இந்த வாழ்க்கை இனி ஒருபோதும் வராது என்பதுதான் வாழ்க்கையை மிகவும் இனிமையாக்குகிறது.
- அழகான பூக்கள் என்னை சங்கடப்படுத்துகின்றன. நான் தேனீயாக இல்லை என்று என்னை வருத்தப்பட வைக்கின்றன.
- எப்போது விடியல் வரும் என்றே தெரியாமல் நான் ஒவ்வொரு கதவையும் திறக்கிறேன்.
- முதுமை திடீரென்று வருகிறது, நாம் நினைப்பது போல் படிப்படியாக அல்ல.
- காயப்பட்ட மான் மிக உயரமாகப் பாய்கிறது.
- நடத்தை என்பது ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதே, அவன் என்ன நினைக்கிறான், என்ன உணர்கிறான் அல்லது எதை நம்புகிறான் என்பதல்ல.
- அதிர்ஷ்டம் தைரியமானவர்களுடன் நட்புக் கொள்கிறது.
- நீங்கள் சிறிய விடயங்களைக் கவனித்துக் கொண்டால், பெரிய விடயங்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும். சிறிய விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறலாம்.
- மூளை வானத்தை விட விசாலமானது.
- கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள், இருந்தும் நாங்கள் எப்போதும் அவரை ஏதோ ஒரு தனிமனிதனாகவே நினைக்கிறோம்.
- ஒருபோதும் வெற்றியடையாதவர்களால் வெற்றி என்பது இனிமையாகக் கருதப்படுகிறது.
- ஒரு புத்தகத்தைப் போன்ற போர்க்கப்பல் இங்கே இல்லை.
- ஒரு பட்டறைக்கல்லாக இருப்பதை விட ஒரு சுத்தியலாக இருப்பது சிறந்தது.
- சொல்லப்பட்டவுடன் ஒரு வார்த்தை இறந்துவிடுகிறது என்று சிலர் சொல்கிறார்கள். அது அன்றிலிருந்துதான் வாழத் தொடங்குகிறது என்று நான் சொல்கிறேன்.
- என் நண்பர்களே என் சொத்து.