ரால்ப் வால்டோ எமர்சனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ரால்ப் வால்டோ எமர்சனின் பொன்மொழிகள்

Ralph Waldo Emerson

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், விரிவுரையாளரும், தத்துவஞானியும் மற்றும் கவிஞரும் தான் ரால்ப் வால்டோ எமர்சன் (Ralph Waldo Emerson). இவர் தனது சித்தாந்தங்களை எண்ணிறைந்த கட்டுரைகள் வழியாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் அமெரிக்கா முழுவதும் பரப்பியுள்ளார்.

மேலும் இவர் வரலாறு எனும் பொருள்படும் History, இழப்பீடு எனும் பொருள்படும் Compensation, கவிஞன் எனும் பொருள்படும் The Poet போன்ற பல பிரபலமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுத்துத் திறமை உள்ள சிலரிடம் பேச்சு திறன் இருக்காது ஆனால் எமர்சன் இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Ralph Waldo Emerson quotes in Tamil


  • தான் எங்கே செல்கிறேன் என்பதை அறிந்த மனிதனுக்கு இந்த உலகமே வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.


  • தோல்விகள் தங்கள் வெற்றிகளுக்கான முன்னேற்பாடு என்பதை உணரும்போது மனிதர்கள் வெற்றி பெறுகிறார்கள்.


  • ஆர்வம் என்பது வெற்றியின் மிகவும் சக்திவாய்ந்த இயந்திரங்களில் ஒன்றாகும். நீங்கள் ஒரு விடயத்தைச் செய்யும்போது, அதை உங்கள் முழு பலத்துடன் செய்யுங்கள். உங்கள் முழு ஆன்மாவையும் அதில் ஈடுபடுத்துங்கள்.


  • நீங்கள் கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது விநாடிகள் உங்கள் மன அமைதியை இழக்கிறீர்கள்.


  • உங்கள் பிரச்சனைகளால் உந்தப்படுபவராக இருக்காதீர்கள், உங்கள் கனவுகளால் வழிநடத்தப்படுபவராக இருங்கள்.


  • ஒவ்வொரு நாளுமே இந்த ஆண்டின் மிகச்சிறந்த நாள்தான் என்று உங்கள் இதயத்தில் எழுதுங்கள்.


  • உங்களை வேறு ஏதாவது ஒன்றாக மாற்றியமைக்க தொடர்ந்து முயற்சிக்கும் இந்த உலகில், நீங்கள் நீங்களாக இருப்பதே மிகப்பெரிய சாதனைதான்.


  • நீங்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற விடயத்தைத் தாண்டி வேறு ஏதாவது செய்ய முயற்சிக்காவிட்டால், நீங்கள் ஒருபோதும் வளர மாட்டீர்கள்.


  • நன்றாக வாழுங்கள், நிறைய கற்றுக்கொள்ளுங்கள், அடிக்கடி சிரியுங்கள், அதிகமாக நேசியுங்கள்.


  • உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய நல்ல விடயங்களைச் சொல்லும் ஒரு நபரே நண்பர்.


  • நான் பார்த்தவை அனைத்தும் நான் பார்க்காத அனைத்தையும் படைத்தவரை நம்ப எனக்கு கற்றுக்கொடுக்கிறது.


  • ஆரோக்கியமே முதன்மையான செல்வம்.


  • ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது அறிவு. ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை விட்டுவிடுவது ஞானம்.


  • பொறுமையும் மனவலிமையும் அனைத்தையும் வெல்லும்.


  • சிறிய மனதுக்கு சிறிய கவலைகள் இருக்கும், பெரிய மனதுக்கு கவலைப்பட நேரமில்லை.


  • அழகான ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பை இழக்காதீர்கள், ஏனெனில் அழகு என்பது கடவுளின் கையெழுத்து.


  • மக்கள் தாங்கள் பார்க்கத் தயாராக இருப்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.


  • சிறந்த நபரைத் தேர்ந்தெடுக்காதீர்கள், உங்களைச் சிறந்த நபராக மாற்றக் கூடிய நபரைத் தேர்ந்தெடுங்கள்.


  • ஒரு நண்பரைப் பெறுவதற்கான ஒரே வழி ஒரு நண்பராக இருப்பதுதான்.


  • ஒரு அரிதான புத்திசாலியை நாம் சந்தித்தால், அவர் என்ன புத்தகங்களைப் படிக்கிறார் என்று நாம் அவரிடம் கேட்க வேண்டும்.


  • தன்னம்பிக்கையே வெற்றிக்கான முதல் ரகசியம்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.