ஜோசப் ஸ்டாலினின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிகள்

Joseph Stalin

ரஷ்யாவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து பின்நாளில் ரஷ்யாவின் தலைவராக உயர்ந்த அரசியல் தலைவர்தான் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin). இவர் ஒரு பொதுவுடைமையாளர் ஆவார். இவரது ஆட்சிக்காலத்தில் தான் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டு ஒரு வல்லரசு நாடாக மாறியது.

மேலும் ஜோசப் ஸ்டாலினின் (Joseph Stalin) கொள்கைகள் ஸ்ராலினிசம் (Stalinism) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தனது கொள்கைகளை கடுமையாக கடைப்பிடித்து ஊழல்கள், குற்றங்கள், துரோகங்கள் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியதால் இவர் ஒரு சர்வாதிகாரியாகவே கருதப்படுகிறார்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Joseph Stalin quotes in Tamil


  • வாக்காளர்கள் எதையுமே தீர்மானிப்பதில்லை. வாக்கு எண்ணுபவர்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள்.


  • வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதை வரலாறு காட்டுகிறது.


  • துப்பாக்கியை விட யோசனைகள் சக்தி வாய்ந்தவை. நாம் நம் எதிரிகளை துப்பாக்கிகளை வைத்திருக்க விடமாட்டோம், நாம் ஏன் அவர்கள் யோசனைகளை வைத்திருக்க விடவேண்டும்.


  • முட்டாளாக இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் சிலர் அந்தச் சலுகையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.


  • பத்திரிகைகள் நாளுக்கு நாள் வளர வேண்டும், அது எங்கள் கட்சியின் கூர்மையான மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம்.


  • அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை, அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது.


  • வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல, வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது.


  • நான் யாரையும் நம்புவதில்லை, என்னையே கூட நம்புவதில்லை.


  • கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது.


  • நாம் முதலாளித்துவவாதிகளை தூக்கிலிடும்போது நாம் பயன்படுத்தும் கயிற்றை அவர்கள் நம்மிடம் விற்பார்கள்.


  • சோவியத் இராணுவத்தில் முன்னேறுவதை விட பின்வாங்குவதற்கு அதிக தைரியம் தேவை.


  • தலை துண்டிக்கப்படும் ஒருவரின் முடி உதிர்வதற்காக நீங்கள் புலம்பாதீர்கள்.


  • எங்களுக்கு ஒரு அடி வெளிநாட்டு நிலம் கூட வேண்டாம், ஆனால் எங்கள் நிலத்தில் ஒரு அங்குலம் கூட நாங்கள் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.


  • எழுத்தாளர்கள் மனித ஆன்மாக்களின் பொறியாளர்கள்.


  • இசை ஒரு நல்ல விடயம், அது மனிதனில் உள்ள மிருகத்தை அமைதிப்படுத்துகிறது.


  • உடற்பயிற்சி செய்யுங்கள், மனிதனின் தோற்றத்தை மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள்.


  • எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை, அவற்றை யார் எண்ணுகிறார்கள் என்பது மட்டுமே முக்கியம்.


  • பட்டுக் கையுறைகளுடன் உங்களால் புரட்சி செய்ய முடியாது.


  • இந்த முழு உலகிலும் போரை விரும்பும் எந்த தேசமும் இல்லை.


  • என் மரணத்திற்குப் பிறகு எனது கல்லறையில் குப்பைகள் குவிந்துவிடும் என்று எனக்குத் தெரியும், ஆனால் வரலாற்றின் காற்று விரைவிலேயோ அல்லது பின்னரோ தயவின்றி அதைத் துடைத்தெறிந்துவிடும்.


  • ஒவ்வொரு நாடும், அது விரும்பினால், அதன் சொந்தப் புரட்சியை உருவாக்கும். அத்தகைய விருப்பம் இல்லை என்றால், எந்தப் புரட்சியும் ஏற்படாது.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.