கலிலியோ கலிலியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
கலிலியோ கலிலியின் பொன்மொழிகள்
இத்தாலியைச் சேர்ந்த பிரபல வானியலாளரும், இயற்பியலாளரும் மற்றும் கணிதவியலாளரும்தான் கலிலியோ கலிலி (Galileo Galilei). 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் இவர் மிகவும் முக்கியமானவர். மற்றும் நவீன அறிவியலின் தந்தை என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
தான் கண்டுபிடித்த தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண்வெளி குறித்த ஆராச்சிகளில் ஈடுபட்ட இவர், இதன் மூலம் கோள்களின் இயக்கம் பற்றியும் விண்வெளி பற்றியும் ஒரு தெளிவான புரிதலையும் கொண்டிருந்தார். மேலும் தனது தொலைநோக்கி மூலம் சந்திரன் மற்றும் சனிக்கோளின் துணைக்கோள்கள் பற்றியும் ஆராய்ந்தார்.
அன்றைய காலகட்டத்தில் மக்கள் பூமியே மையத்தில் உள்ளது எனவும் சூரியன் உட்பட அனைத்து கோள்களும் பூமியை சுற்றி வருகிறது என நம்பியிருந்தனர். இதனால் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற தனது சூரியமையக் கொள்கையால் ஏற்பட்ட எதிர்ப்பால் தனது இறுதிக்காலம் முழுவதையுமே வீட்டுச்சிறையில் கழித்தார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Galileo Galilei quotes in Tamil
- நமக்கு புலன்கள், பகுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனத்தைக் கொடுத்த அதே கடவுள் அவற்றை நாம் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று விரும்பினார் என நம்ப வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன்.
- இயற்கையின் விதிகள் கடவுளின் கையால் கணித மொழியில் எழுதப்பட்டுள்ளன.
- எல்லா உண்மைகளையும் அவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் புரிந்துகொள்வது எளிதானது, அவற்றைக் கண்டுபிடிப்பதே முக்கியமான விடயம்.
- அவரிடமிருந்து எதையுமே கற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அறிவில்லாத ஒரு மனிதனை நான் சந்தித்ததில்லை.
- உங்களை நீங்களே அறிவதே மிகச்சிறந்த ஞானம்.
- உங்களால் ஒரு மனிதனுக்கு எதையும் கற்பிக்க முடியாது, அதை தனக்குள்ளே கண்டுபிடிக்க அவருக்கு உதவ மட்டுமே முடியும்.
- அளவிடக்கூடியதை அளவிடுங்கள், அளவிட முடியாததை அளவிடக்கூடியதாக ஆக்குங்கள்.
- கணிதம் என்பது கடவுள் பிரபஞ்சத்தை எழுதிய மொழி.
- அறிவியலின் சாவியும் கதவும் கணிதம்தான்.
- இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதற்கு, அது எழுதப்பட்ட மொழியான, கணிதம் எனும் மொழியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- புலன்கள் நம்மைத் தோல்வியடையச் செய்யும் இடத்தில், பகுத்தறிவு அடியெடுத்து வைக்க வேண்டும்.
- இயற்கை எனும் புத்தகம் கணித மொழியில் எழுதப்பட்டுள்ளது.
- சாத்தியமற்றதைத் தவிர இயற்கைக்கு மாறாக எதுவும் நிகழாது, மேலும் அது ஒருபோதும் நிகழாது.
- நான் மீண்டும் எனது ஆய்வுகளை ஆரம்பத்திலிருந்து தொடங்கினால், நான் பிளேட்டோவின் ஆலோசனையைப் பின்பற்றி கணிதத்துடன் தொடங்க வேண்டும்.
- நீங்கள் இரவைப் போல இருட்டான இடத்தில் இருந்து பூமி ஒளிர்வதைக் காண முடிந்தால், அது உங்களுக்கு சந்திரனை விட அற்புதமானதாகக் காட்சியளிக்கும்.