அனுபவத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
அனுபவத்தைப் பற்றிய பொன்மொழிகள்
இந்த உலகில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களால் கற்றுக்கொடுக்க முடியாத பாடங்களைக் கூட அனுபவம் கற்றுக்கொடுத்துவிடும். நம் கடந்த கால வாழ்க்கையை ஆழமாக உற்றுநோக்கினால் அனுபவம் என்பது எவ்வளவு சிறந்த ஆசிரியர் என்பது புரியும். ஆனால் நாம்தான் அது கற்றுத்தரும் பாடங்களை சரிவரக் கற்கத் தவறிவிடுகிறோம்.
நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் பல துன்பங்களுக்குக் காரணம் நாம் ஒருமுறை செய்த அதே தவறை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பதுதான். அனுபவம் (Experience) உங்களுக்கு கற்றுத்தர விரும்பும் பாடத்தை நீங்கள் சரிவரக் கற்றுக்கொள்ளும் வரை அதன் பரீட்சை தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அனுபவத்திலிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொண்டால் எந்த அனுபவமும் மோசமான அனுபவமல்ல. மேலும் அனுபவத்திலிருந்து நாம் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை என்றால் நல்ல அனுபவம் கூட மோசமான அனுபவம்தான். உங்கள் கடந்த கால பிரச்சனைகளை வெறும் பிரச்சனைகளாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு அனுபவமாகப் பாருங்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Experience quotes in Tamil
- நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து வருகிறது, அனுபவம் மோசமான முடிவிகளிலிருந்து வருகிறது. --ரீட்டா மே பிரவுன்
- அனுபவம் என்பது மிக மோசமான ஆசிரியர், அது பாடத்தை வழங்கும் முன் தேர்வை வைக்கிறது. --வெர்ன் லோவ்
- அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அதன் கட்டணம் அதிகம். --ஹென்ரிச் ஹெய்ன்
- வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க பாடங்களை கற்பிக்க முடியாது, அவை அனுபவிக்கப்பட வேண்டும். --லியாம் பெய்ன்
- அனுபவிக்கும் வரை எதுவும் உண்மையாகாது. --ஜான் கீட்ஸ்
- வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் இன்பத்தையும் நீங்கள் அனுபவிக்க விரும்பினால், அதனுடன் வரும் அனைத்து துன்பங்களையும் தோல்விகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். --மேட் ஹாஃப்மேன்
- அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதை விட வலிமிகுந்தது ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது, அது அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளாதது. --ஆர்க்கிபால்ட் மேக்லீஷ்
- கடந்த கால தவறுகளை சரிசெய்வது சாத்தியமற்றது, ஆனால் அவற்றினால் கிடைத்த அனுபவத்தின் மூலம் நாம் பயனடையலாம். --ஜார்ஜ் வாஷிங்டன்
- ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். --ஜேக் ராபர்ட்ஸ்
- அனுபவம் என்பது எதிர்கால சுமையைக் குறைப்பதற்கான கடந்த கால பாடம். --மைக்கேல் சேஜ்
- நீங்கள் அனுபவத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் எதுவும் நேர விரயம் இல்லை. --அகஸ்டே ரோடின்
- அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியர். --ஜான் லெஜண்ட்
- கடினமான பாதை அநேகமாக எப்போதும் சரியான பாதையாக இருக்கும் என்று என் அனுபவம் கூறுகிறது. --ஷாஹித் கான்
- ஞானம் என்பது அனுபவத்தின் மகள். --லியோனார்டோ டா வின்சி
- அனுபவம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது, நம்பிக்கை உங்களை அதைச் செய்ய அனுமதிக்கிறது. --ஸ்டான் ஸ்மித்
- அனுபவம் என்பது வெறுமனே நம் தவறுகளுக்கு நாம் கொடுக்கும் பெயர். --ஆஸ்கார் வைல்ட்
- என்னைப் பொறுத்தவரை, எதிர்மறையான அனுபவம் என்று எதுவும் இல்லை. --ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
- தகவல் ஒரு அறிவு அல்ல. அறிவின் ஒரே மூலம் அனுபவம் மட்டுமே. ஞானத்தை அடைய உங்களுக்கு அனுபவம் தேவை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் என்று யாருமே இல்லை. காலமே அனுபவத்தை உருவாக்குகிறது. --அரிஸ்டாட்டில்
- சிந்தனை அற்புதமானது, ஆனால் அனுபவம் இன்னும் அற்புதமானது. --ஆஸ்கார் வைல்ட்
- அனுபவத்திலிருந்து மனிதர்கள் எதையுமே கற்றுக்கொள்வதில்லை என்பதை நாங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
- அனுபவம் சிந்தனையின் குழந்தை, சிந்தனை செயலின் குழந்தை. --பெஞ்சமின் டிஸ்ரேலி
- ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் வெறுமனே ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்ளாதீர்கள், நேர்மறையான ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். --அல் நியூஹார்த்
- எங்கள் அனுபவங்கள் அனைத்திற்கும் நாம் ஒவ்வொருவருமே பொறுப்பு. --லூயிஸ் ஹே
- கடவுள் மனிதர்களின் உருவப்படங்களை வரைவதற்கு அனுபவத்தை அனுப்புகிறார். --ஹென்றி வார்டு பீச்சர்
- மோசமான அனுபவம் என்பது முட்டாள்கள் மட்டுமே தொடர்ந்து செல்லும் பள்ளிக்கூடம். --எஸ்ரா டாஃப்ட் பென்சன்
- இங்குள்ள எந்த மனிதனின் அறிவும் அவனது அனுபவத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. --ஜான் லாக்
- சிறிய அனுபவங்களின் மூலம் நாங்கள் பெரிய விடயங்களைக் கற்றுக்கொள்கிறோம். --பிராம் ஸ்டோக்கர்
- கடினமான அனுபவங்களின் மூலம், சில நேரங்களில் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக மாறும். --தலாய் லாமா