வின்ஸ்டன் சர்ச்சிலின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
வின்ஸ்டன் சர்ச்சிலின் பொன்மொழிகள்
ஐக்கிய இராச்சியத்தைச் (united kingdom) சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரியும் பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமாராக பதவி வகித்தவரும், மிகச்சிறந்த பேச்சாளரும் மற்றும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரும்தான் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill). முதலாம் உலகப் போரின் போது இவர் பிரித்தானியா இராணுவ படைத்தளபதியாக பணியாற்றினார்.
மேலும் இரண்டாம் உலகப் போரின் போது இவர் பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்தார். பிரித்தானியாவில் நோபல் பரிசுபெற்ற ஒரே ஒரு பிரதமராக இவர் விளங்குகிறார். மற்றும் இவருக்கு ஐக்கிய அமெரிக்காவால் கௌரவக் குடியுரிமையும் (Honorary Citizenship) வழங்கப்பட்டது. மேலும் பிரித்தானியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் இவரும் ஒருவராவார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Winston Churchill quotes in Tamil
- குரைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கற்களை எறிந்துகொண்டிருந்தால், நீங்கள் உங்கள் இலக்கை அடைய மாட்டீர்கள்.
- ஒரு அவநம்பிக்கையாளர் ஒவ்வொரு வாய்ப்பிலும் கஷ்டத்தைப் பார்க்கிறார், ஒரு நம்பிக்கையாளர் ஒவ்வொரு கஷ்டத்திலும் வாய்ப்பைப் பார்க்கிறார்.
- நாம் வெற்றி பெற்றால் யாரும் கவனிக்க மாட்டார்கள். நாம் தோல்வியடைந்தால் கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.
- வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்பட்டது.
- உங்களால் எவ்வளவு தூரம் பின்னோக்கிப் பார்க்க முடியுமோ, உங்களால் அவ்வளவு தூரம் முன்னோக்கிப் பார்க்க முடியும்.
- அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து ஒருவர் ஒருபோதும் பின்வாங்கி ஓட முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், நீங்கள் ஆபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். ஆனால் நீங்கள் அதை தயக்கமின்றி உடனேயே சந்தித்தால், நீங்கள் ஆபத்தை பாதியாகக் குறைப்பீர்கள்.
- சில மனிதர்கள் தங்கள் கொள்கைகளுக்காக தங்கள் கட்சியை மாற்றுகிறார்கள், மற்றவர்கள் தங்கள் கட்சிக்காக தங்கள் கொள்கைகளை மாற்றுகிறார்கள்.
- வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி என்பது அபாயகரமானது அல்ல, தொடர்வதற்கான தைரியம்தான் முக்கியமானது.
- முட்டாள்கள் கூட சில சமயங்களில் சரியானவர்கள் என்பதை அறிவதே வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடமாகும்.
- சில நேரங்களில் சட்டங்கள் இல்லாமல் இருப்பதை விட கடுமையான சட்டங்களே சிறந்தவை.
- நூலகத்தை விட வேறெதுவும் ஒரு மனிதனை மரியாதைக்குரியவராக ஆக்குவதில்லை.
- நம்மால் முடிந்ததைச் மட்டும் செய்தால் போதாது, சில நேரங்களில் நாம் தேவையானதை செய்ய வேண்டும்.
- கழுகுகள் மௌனமாக இருக்கும் போது, கிளிகள் கத்தத் தொடங்கும்.
- எங்களுக்கு நிறைய மனக்கவலைகள் உள்ளன, மேலும் ஒன்று மற்றொன்றை இல்லாமல் செய்துவிடுகிறது.
- போரில் உங்களை ஒரு முறை மட்டுமே கொல்ல முடியும். அரசியலில் நீங்கள் பலமுறை கொல்லப்படுவீர்கள்.
- அரசியல் என்பது நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்ன நடக்கப் போகிறது என்பதை முன்னறிவிக்கும் திறனாகும்.
- தன் கடந்த காலத்தை மறந்த தேசத்திற்கு எதிர்காலம் இல்லை.
- பயம் என்பது ஒரு எதிர்வினை, தைரியம் என்பது ஒரு தீர்மானம்.
- ஒரு நல்ல பேச்சு ஒரு பெண்ணின் பாவாடையைப் போல இருக்க வேண்டும். விடயத்தை மறைக்கும் அளவுக்கு போதுமான நீளமும், ஆர்வத்தை உருவாக்கும் அளவுக்கு சிறியதாகவும் இருக்க வேண்டும்.
- நாம் கூறாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர்கள், ஆனால் நாம் உதிர்ந்த வார்த்தைகளுக்கு நாம் அடிமைகள்.
- வெற்றி என்பது தோல்வியில் இருந்து தோல்விக்கு உற்சாகத்தை இழக்காமல் செல்வதில் உள்ளது.