ரூமியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ரூமியின் பொன்மொழிகள்

Rumi

ஈரானைச் (Iran) சேர்ந்த உலகப்புகழ் மிக்க கவிஞரும், ஆன்மீகவாதியும் மற்றும் சூபி ஞானியும் தான் ரூமி (Rumi). இவரின் தாய்மொழி பாரசீக மொழியாகும் ஆனாலும் பாரசீக மொழியில் எழுதப்பட்ட இவரின் படைப்புகள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் இவர் அமெரிக்காவில் மிகவும் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவராவார். இவரின் கவிதைத் தொகுப்புகள் பல அமெரிக்காவில் அதிகம் விற்பனையான கவிதைத் தொகுப்புகளாக உள்ளன. ரூமியின் ஆன்மீகக் கருத்துக்கள் நம்மை சிந்திக்கத் தூண்டும் மிகச்சிறந்த தத்துவங்களாகும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Rumi quotes in Tamil


  • நேற்று நான் ஒரு புத்திசாலி, அதனால் நான் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் ஒரு ஞானி, அதனால் என்னை நானே மாற்றிக் கொள்கிறேன்.


  • ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலைக்காக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், அந்த வேலைக்கான ஆசை ஒவ்வொருவர் இதயத்திலும் வைக்கப்பட்டுள்ளது.


  • உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல. மழைதான் பூக்களை வளர்க்கிறது, இடி அல்ல.


  • கதவின் பூட்டு நீங்கள்தான் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதைத் திறக்கும் சாவியே நீங்கள்தான்.


  • நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும்.


  • பயணம் உங்கள் வாழ்க்கையில் ஆற்றலையும் அன்பையும் மீண்டும் கொண்டுவருகிறது.


  • வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும்.


  • மனதால் புரிந்துகொள்ள முடியாத விடயங்களைக் கேட்க ஆன்மாவுக்கு சொந்தமாக காதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


  • உங்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி ஒன்று உள்ளே உள்ளது. அதைத் தேடுங்கள்.


  • அமைதியாக இருங்கள், கடவுளின் கரத்தால் மட்டுமே உங்கள் இதயத்தின் சுமைகளை அகற்ற முடியும்.


  • நீங்கள் கடவுளுடன் தனிமையில் இருக்கும்போது மட்டுமே உண்மையான ஓய்வு கிடைக்கும்.


  • இதய வீட்டிற்குள் வாருங்கள். அங்கே அமைதியும் ஆறுதலும் உள்ளது.


  • துக்கங்களால் நிறைந்திருந்தாலும் இதயத்தை நிராகரிக்காதீர்கள். கடவுளின் புதையல்கள் உடைந்த இதயங்களில் புதைக்கப்பட்டுள்ளன.


  • உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள்.


  • உங்கள் ஆன்மா உங்களைத் தேடும்போது, அதன் பாதையில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வையுங்கள்.


  • வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும்.


  • உங்கள் சொந்த ஆன்மாவை அறியும் ஆசை மற்ற எல்லா ஆசைகளையும் அழித்துவிடும்.


  • நான் கடவுளைத் தேடினேன், என்னை மட்டுமே கண்டுபிடித்தேன். நான் என்னைத் தேடினேன், கடவுளை மட்டுமே கண்டுபிடித்தேன்.


  • இரை தேடும் போது சிங்கம் மிகவும் அழகாக இருக்கிறது.


  • உடல் வெறும் ஆடை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அணிந்தவரைத் தேடிச் செல்லுங்கள், ஆடையை அல்ல.


  • நீங்கள் முழு மனதுடன் அன்பைத் தேடும்போது, அதன் எதிரொலியை நீங்கள் பிரபஞ்சத்தில் காண்பீர்கள்.


  • நீரோடையில் உள்ள நீர் பல முறை மாறியிருக்கலாம், ஆனால் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் பிரதிபலிப்பு அப்படியேதான் உள்ளது.


  • எந்த ஆழமான கேள்வியின் உள்ளேயும் பதில் உள்ளது.


  • ஒவ்வொரு முறை தேய்க்கப்படும்போதும் நீங்கள் எரிச்சலடைந்தால், உங்கள் கண்ணாடி எப்படி பளபளப்பாகும்.


  • நீங்கள் பிறந்த நாளிலேயே, நீங்கள் இந்த உலகிலிருந்து தப்பிக்க உதவும் ஒரு ஏணி அமைக்கப்பட்டுள்ளது.


  • நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பதன் மூலம் நீங்கள் உங்கள் மதிப்பைக் காட்டுகிறீர்கள்.


  • நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.


  • ஏற்கனவே உங்கள் கழுத்தில் இருக்கும் வைர மாலையைத் தேடி நீங்கள் அறை அறையாக அலைகிறீர்கள்.


உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.