பிரச்சனையைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
பிரச்சனையைப் பற்றிய பொன்மொழிகள்
ஒரு கல்லில் விழும் ஒவ்வொரு அடியும் அந்தக் கல்லை எப்படி ஒரு அழகிய சிலையாக மாற்றுகிறதோ அதுபோல் தான் நம் ஒவ்வொரு பிரச்சனைகளும் (problems) எங்களை செதுக்குகின்றன மேலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய உதவுகின்றன. நீங்கள் அடிவாங்கத் தயாராக இல்லை என்றால் உங்களால் அழகான சிலையாக மாறவும் முடியாது.
பிரச்சனைகளே இல்லாத ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்படுவது, காற்றே இல்லாத பூமியில் வாழ ஆசைப்படுவதைப் போன்றது. அதனால் பிரச்சனைகளே இல்லாமல் வாழவேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டு நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளலாம் என்பதில் கவனத்தைக் குவியுங்கள்.
சில நேரங்களில் நம் பிரச்சனைகள் தீர்க்க முடியாத பெரும் பிரச்சனைகளாகத் தோன்றலாம் ஆனால் அவை அவ்வாறு அல்ல, எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது நிச்சயம் உண்டு. பிரச்சனைகளைக் கண்டு நாம் பின்வாங்காமல் அதை தைரியத்துடன் எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை மிகவும் எளிதான பயணமாக மாறிவிடும்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Problem quotes in Tamil
- வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகள் இரண்டு காரணங்களால் ஏற்படுகின்றன: நாம் சிந்திக்காமலே செயல்படுகிறோம் அல்லது நாம் செயல்படாமல் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். --ஜிக் ஜிக்லர்
- உங்கள் பிரச்சினைகளை அடையாளம் காணுங்கள் ஆனால் உங்கள் சக்தியையும் ஆற்றலையும் தீர்வுகளுக்கு கொடுங்கள் --டோனி ராபின்ஸ்
- மிகவும் சிக்கலான பிரச்சனை கூட இறுதியில் தீர்க்கப்படும். ஏனெனில் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருக்கும். --கிம் ஜூன்
- உங்கள் பிரச்சனைகளைக் கண்டு விலகி ஓடாமல், அவற்றை எதிர்கொண்டால் உங்கள் அனைத்துப் பிரச்சினைகளும் சிறியதாகிவிடும். --வில்லியம் ஹால்சி
- பிரச்சனையை நாம் பார்க்கும் விதமே பிரச்சனையாகும். --ஸ்டீபன் கோவி
- ஒவ்வொரு பிரச்சனைக்குள்ளும் அதைத் தீர்ப்பதற்கான விதைகள் உள்ளன. உங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை என்றால், உங்களுக்கு எந்த விதைகளும் கிடைக்காது. --நார்மன் வின்சென்ட் பீலே
- தீர்வில் கவனம் செலுத்துங்கள், பிரச்சினையில் அல்ல. --ஜிம் ரோன்
- நாங்கள் மனரீதியாகவும் ஆன்மீகரீதியாகவும் வளர்வது பிரச்சனைகளால் மட்டுமே. --எம். ஸ்காட் பெக்
- பிரச்சினைகள் இல்லாவிட்டால், நம்மில் பெரும்பாலானோர் வேலையற்றவர்களாக இருப்போம். --ஜிக் ஜிக்லர்
- பெரிய பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை, நிறைய சிறிய பிரச்சினைகள் மட்டுமே உள்ளன. --ஹென்றி ஃபோர்ட்
- உங்கள் சொந்த மனதை அறிந்துகொள்வதே எங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வாகும். --தப்டன் யெஷே
- பிரச்சினைகளைத் தீர்க்கும் போது, இலைகளை வெட்டுவதற்குப் பதிலாக வேர்களைத் தோண்டுங்கள். --அந்தோணி ஜே. டி. ஏஞ்சலோ
- நல்ல வாழ்க்கை என்பது பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை அல்ல. நல்ல வாழ்க்கை என்பது நல்ல பிரச்சனைகளுடன் கூடிய வாழ்க்கை. --மார்க் மேன்சன்
- எல்லாப் பிரச்சனைகளும் மனதின் மாயைகளே. --எக்கார்ட் டோல்
- உங்கள் பிரச்சினைகளால் உந்தப்படுபவராக இருக்காதீர்கள். உங்கள் கனவுகளால் வழிநடத்தப்படுபவராக இருங்கள். --ரால்ப் வால்டோ எமர்சன்
- இராணுவ பலத்தால் ஒரு கௌரவப் பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியாது. --ராண்ட் பால்
- பிரச்சனையிலிருந்து தப்பிக்க நான் எல்லா நேரமும் வேலை செய்கிறேன். --எமினெம்
- பிரச்சினைகளை உருவாக்கியபோது நாம் பயன்படுத்திய அதே சிந்தனையைக்கொண்டு, எங்களால் அவற்றைத் தீர்க்க முடியாது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
- பிரச்சினையை விவரிக்க முடியாதவர், ஒருபோதும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாட்டார். --கன்பூசியஸ்
- நாம் பிரச்சனைகளை ஆராயும்போது தீர்வைக் கண்டுபிடிக்கிறோம். பிரச்சனை வேறு தீர்வு வேறல்ல, பிரச்சனையே தீர்வாகும். பிரச்சனையை புரிந்துகொள்வது பிரச்சனையை கரைந்துபோகச் செய்கிறது. --புரூஸ் லீ
- மழையின் போது அனைத்து பறவைகளும் மறைவிடத்தைத் தேடுகின்றன. ஆனால் கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதன் மூலம் மழையைத் தவிர்க்கிறது. சிக்கல்கள் பொதுவானவை தான், ஆனால் அணுகுமுறை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. --ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
- ஒரு பிரச்சனைக்கான அரசாங்கத்தின் தீர்வானது பொதுவாக பிரச்சனையைப் போலவே மோசமானது. --மில்டன் ஃப்ரீட்மேன்
- ஒவ்வொரு பிரச்சனைக்கும் உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தீர்வு உள்ளது. ஒவ்வொரு கணக்கிற்கும் கணிதவியலாளர் கண்டுபிடித்தாரோ இல்லையோ ஏற்கனவே ஒரு சரியான விடை உள்ளது. --கிரென்வில் க்ளீசர்
- ஒவ்வொரு பிரச்சனைக்கு உள்ளேயும் ஒரு வாய்ப்பு உள்ளது. --ராபர்ட் கியோசாகி
- பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலில் நீங்களே முயற்சிக்காமல் உதவிக்காக மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். --கொலின் பவல்
- நீங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போதே அதை தீர்க்கத் தொடங்குகிறீர்கள். --ரூடி கியுலியானி
- எங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் கடவுள் தான் தீர்வு. -பவுலின் க்ரீடன்
- ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் படி அது இருப்பதை அடையாளம் காணுவதாகும். --ஜிக் ஜிக்லர்
- உங்கள் பிரச்சனைகளால் உந்தப்படுபவராக இருக்காதீர்கள், உங்கள் கனவுகளால் வழிநடத்தப்படுபவராக இருங்கள். --ரால்ப் வால்டோ எமர்சன்