ஓஷோவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஓஷோவின் பொன்மொழிகள்

Osho

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பிறந்து அமெரிக்கா வரை சென்று தனது ஆச்சிரமத்தை நிறுவிய துறவியும் மற்றும் ஆன்மீகவாதியும்தான் ஓஷோ (Osho). இவரது இயற்பெயர் ரஜ்னீஷ் (Rajneesh) என்பதாகும். இவர் தனது இருபத்து ஒராவது வயதில் ஞானமடைந்தார்.

ஓஷோ தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவராவார். மேலும் தத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பல சொற்பொழிவுகளை இவரது சீடர்கள் நூல்களாக வெளியிட்டுள்ளனர். அவை ஒவ்வொன்றும் மிகச்சிறந்த ஆன்மீகப் படைப்புகளாகும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Osho quotes in Tamil


  • அறிவாற்றல் என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். அறிவார்ந்தவராக இருப்பது போலியானது, இது ஒரு போலித்தனமான புத்திசாலித்தனம். அது உண்மையானதல்ல ஏனெனில் அது உங்களுடையது அல்ல, அது கடன் வாங்கப்பட்டது. புத்திசாலித்தனம் என்பது உள் உணர்வின் வளர்ச்சி. அறிவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது தியானத்துடன் சம்பந்தப்பட்டது.


  • நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ அல்லது சாமந்திப்பூவாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான் முக்கியம்.


  • ஒருமுறை உங்கள் விழிப்புணர்வு ஒரு சுடராக மாறியவுடன், அது உங்கள் மனம் உருவாக்கிய சகல அடிமைத்தனங்களையும் எரித்துவிடும்.


  • யாரும் உயர்ந்தவர்களும் இல்லை, யாரும் தாழ்ந்தவர்களும் இல்லை, ஆனால் யாரும் சமமானவர்களும் இல்லை. மக்கள் வெறுமனே தனித்துவமானவர்கள், ஒப்பிடமுடியாதவர்கள். நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்.


  • உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள், இல்லையெனில் நீங்கள் தங்களை தாங்களே அறியாத மற்றவர்களின் கருத்துக்களை சார்ந்திருக்க வேண்டும்.


  • என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள். நான் யாருக்காவது உண்மையான நண்பனா? என்று கேளுங்கள். அதுதான் சரியான கேள்வி. எப்போதும் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்.


  • வாழ்க்கையில் முக்கியமான ஒரே விடயம், உங்களைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து மட்டுமே.


  • நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை.


  • உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள்.


  • இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது.


  • மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறதா இல்லையா என்பது உண்மையான கேள்வி அல்ல. மரணத்திற்கு முன் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதுதான் உண்மையான கேள்வி.


  • உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது; உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. நீயே யூதாஸ் நீயே இயேசு.


  • உங்கள் நேர்மை, உங்கள் அன்பு, உங்கள் இரக்கம் உங்கள் உள்ளத்திலிருந்து வர வேண்டும், போதனைகள் மற்றும் வேதங்களிலிருந்து அல்ல.


  • எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்கள், வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள், வாழ்க்கையே இறுதி இலக்கு.


  • வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை.


  • இந்த உலகின் மிகப் பெரிய அச்சம் மற்றவர்களின் கருத்துகளே. நீங்கள் கூட்டத்திற்கு அஞ்சாத தருணத்திலிருந்து நீங்கள் இனிமேலும் ஒரு செம்மறியாடு இல்லை, நீங்கள் ஒரு சிங்கம் ஆகிறீர்கள். உங்கள் இதயத்தில் ஒரு பெரிய கர்ஜனை எழுகிறது, சுதந்திரத்தின் கர்ஜனை.


  • உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதுவே உங்கள் ஒரே ஆசிரியர்.


  • பயம் மனதிலிருந்து வருகிறது, அன்பு உங்கள் இதயத்திலிருந்து வருகிறது, இதயம் சொல்வதைக் கேளுங்கள்.


  • ஒரு குழந்தை பிறக்கும் தருணத்தில், ஒரு தாயும் பிறக்கிறாள். அவள் முன்பு ஒருபோதும் இருந்ததில்லை. அந்த பெண் இருந்தாள், ஆனால் தாய் ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு தாய் முற்றிலும் புதியவள்.


  • உங்கள் தலையிலிருந்து வெளியேறி உங்கள் இதயத்திற்குள் நுழையுங்கள். குறைவாக சிந்தியுங்கள், அதிகமாக உணருங்கள்.


  • காதலில் மற்றவர் முக்கியம், காமத்தில் நீங்கள் முக்கியம்.


  • எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றத்திற்கே வழிவகுக்கும். எதிர்பார்ப்புகளே விதைகள், மற்றும் எதிர்பார்ப்பு என்பது விரைவிலோ அல்லது பின்னரோ நீங்கள் அறுவடை செய்ய வேண்டிய பயிராகும்.


  • அன்பே தெய்வீகத்தை நோக்கிய முதல் படி, சரணடைதலே இறுதிப் படி. மேலும் இரண்டு படிகளே முழுப் பயணமுமாகும்.


  • நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு இருள் தேவையானது.


  • ஒளியைக் கண்டுபிடியுங்கள், அது உங்களுக்கு பாதையைக் காண்பிக்கும். உங்கள் சொந்த ஒளியால் காட்டப்படும் பாதை மட்டுமே சரியான பாதையாகும்.


  • யாருடனும் சண்டையிடுவது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் நீங்கள் உங்கள் எதிரி போல ஆகிவிடுவீர்கள்.


  • இது நல்லது, அது கெட்டது என்று சொல்லாதீர்கள். எல்லாப் பாகுபாடுகளையும் கைவிடுங்கள். எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.


  • ஒப்பீடு என்பது மிகவும் முட்டாள்தனமான அணுகுமுறை, ஏனெனில் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர் மற்றும் ஒப்பிடமுடியாதவர். இந்தப் புரிதல் உங்களில் நிலைபெற்றவுடன், பொறாமை மறைந்துவிடும்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.