நிக்கோலா டெஸ்லாவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
நிக்கோலா டெஸ்லாவின் பொன்மொழிகள்
ஆஸ்திரியாவில் (Austria) பிறந்து பின்நாளில் அமெரிக்காவில் குடிபெயர்ந்த உலகப் புகழ் மிக்க கண்டுபிடிப்பாளரும், மின்பொறியாளரும் மற்றும் இயந்திரப் பொறியாளரும் தான் நிக்கோலா டெஸ்லா (Nikola Tesla). மேலும் இன்று நாம் எல்லோரும் பயன்படுத்தும் மின்சாரத்தை (Alternating Current) உருவாக்கும் மோட்டரை (Induction Motor) கண்டுபிடித்தவரும் இவர்தான்.
இந்த உலகம் போற்றத் தவறிய மாபெரும் மேதைகளில் டெஸ்லாவும் ஒருவர். அன்றே அவரை போற்றி இருந்தால் உலகம் இன்று இருப்பதை விட தொழிநுட்பத்தில் என்னும் அதிகம் முன்னேறி இருக்கும். டெஸ்லாவின் பல கண்டுபிடிப்புகள் அவருக்கு போதிய நிதி உதவி கிடைக்காமையினால் பாதியிலேயே அவரால் கைவிடப்பட்டது, அவற்றில் ஒன்றுதான் கம்பி இல்லா மின்இணைப்பு (Wireless Current).
அன்றே அவருக்கு உரிய அங்கிகாரத்தை வழங்கி இருந்தால் இன்று நாம் கம்பி இல்லா மின்இணைப்பை பயன்படுத்தி இருப்போம். மனிதனால் இயற்கையைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் அந்த இயற்கையையே கட்டுப்படுத்தும் அளவுக்கு டெஸ்லாவிடம் அறிவாற்றல் இருந்தது. அதாவது அவர் நில நடுக்கத்தை செயற்கையாக ஏற்படுத்தக்கூடிய கருவியைக் கூட கண்டுபிடித்துள்ளார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Nikola Tesla quotes in Tamil
- உள்ளுணர்வு என்பது அறிவை மீறிய ஒன்று. சந்தேகத்திற்கு இடமின்றி, தர்க்கரீதியான அனுமானம் அல்லது மூளையின் வேறு எந்த முயற்சியும் பயனற்றதாகும்போது உண்மைகளை உணர்வதற்கு உதவும் சில நுண்ணிய இழைகள் நம்மிடம் உள்ளன.
- எனக்கு ஒரு யோசனை வந்தவுடன் அதை என் கற்பனையில் கட்டமைக்க ஆரம்பிக்கிறேன். நான் கட்டுமானத்தை மாற்றுகிறேன், மேம்படுத்தல்களைச் செய்கிறேன், சாதனத்தை முழுமையாக என் மனதில் இயக்குகிறேன்.
- பெரும்பாலானவர்கள் வெளி உலக சிந்தனையிலேயே மூழ்கியுள்ளனர், அதனால் தங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக மறந்துவிடுகிறார்கள்.
- இன்றைய விஞ்ஞானிகள் தெளிவாக சிந்திப்பதற்குப் பதிலாக ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். தெளிவாக சிந்திப்பதற்கு ஒருவர் புத்தி உள்ளவராக இருக்க வேண்டும், ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் ஒருவர் முழு பைத்தியமாகவும் இருக்க முடியும்.
- தனியாக இருங்கள், அதுவே கண்டுபிடிப்பின் ரகசியம். தனியாக இருங்கள், அப்போதுதான் யோசனைகள் பிறக்கும்.
- இணக்கவாதிகள் நிறைந்த உலகில் சமூக விரோத நடத்தை என்பது புத்திசாலித்தனத்தின் ஒரு பண்பாகும்.
- மின்சக்தி அனைத்து இடங்களிலும் எல்லையற்ற அளவில் உள்ளது. மேலும் நிலக்கரி, எண்ணெய் அல்லது வேறு எந்த எரிபொருளின் தேவையின்றி உலக இயந்திரங்களை இயக்க முடியும்.
- திருமணமானவர்களால் உருவக்கப்பட்ட பல சிறந்த கண்டுபிடிப்புகளை உங்களால் பெயரிட முடியும் என்று நான் நினைக்கவில்லை.
- அவர்கள் என் யோசனையைத் திருடிவிட்டார்கள் என்று நான் கவலைப்படவில்லை. அவர்களிடம் சொந்தமாக எதுவும் இல்லை என்று நான் கவலைப்படுகிறேன்.
- எல்லாவற்றிற்கும் மேலாக, புத்தகங்களை நான் மிகவும் விரும்பினேன்.
- இன்று உலகின் பெரும்பாலான நாகரிகமடைந்த நாடுகள் தங்கள் வருமானத்தில் அதிகபட்சத்தை போருக்கும், குறைந்தபட்சத்தை கல்விக்கும் செலவிடுகின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டு இந்த ஒழுங்கை தலைகீழாக மாற்றியமைக்கும். போர்க்களத்தில் இறப்பதை விட அறியாமைக்கு எதிராக போராடுவது மிகவும் போற்றத்தக்கதாக இருக்கும்.
- நிகழ்காலம் அவர்களுடையது, எதிர்காலத்திற்காக நான் உண்மையாக உழைத்தேன், அது என்னுடையது.
- ஒரு மனிதன் கடவுள் என்று அழைப்பதை, இன்னொருவன் இயற்பியல் விதிகள் என்று அழைக்கிறான்.
- நீங்கள் வெறுமனே 3, 6 மற்றும் 9 இன் மகத்துவத்தை அறிந்திருந்தால், பிரபஞ்சத்திற்கான திறவுகோல் உங்களிடம் இருக்கும்.
- கண்டுபிடிப்புகளே படைபாற்றல் மிக்க மனித மூளையின் மிக முக்கியமான தயாரிப்பு ஆகும்.
- அறிவியலானது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இறையியல் கோட்பாடுகளை எதிர்க்கிறது.
- கண்டுபிடிப்பாளர்களுக்கு திருமண வாழ்க்கைக்கு நேரம் இல்லை.
- நான் எதைத் தொடங்கினாலும் அதை முடிக்க வேண்டும் என்ற ஒரு உண்மையான வெறி எனக்கு இருந்தது, அது என்னை அடிக்கடி சிரமத்திற்குள்ளாக்கியது.
- நாம் அனைவரும் ஒன்று. அகங்காரங்கள், நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் மட்டுமே நம்மைப் பிரிக்கின்றன.
- எனது அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று கூட தெரியாத பல நாட்கள் இருந்தன. ஆனாலும் நான் ஒருபோதும் வேலை செய்வதற்குப் பயப்படவில்லை.
- தவறான புரிதல்கள் எப்போதும் ஒருவர் மற்றொருவரின் கண்ணோட்டத்துக்கு மதிப்பளிக்க இயலாத காரணத்தால் ஏற்படுகின்றன.