லியோனார்டோ டா வின்சியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
லியோனார்டோ டா வின்சியின் பொன்மொழிகள்
உலகப் புகழ் பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியத்தை வரைந்த ஓவியரும், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், கட்டட வடிவமைப்பாளர், சிற்பி மற்றும் விஞ்ஞானி என பன்முகத் திறமை கொண்ட இத்தாலிய அறிஞர் தான் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci). இவரின் மிகச்சிறந்த ஓவியங்களில் ஒன்றான சால்வேட்டர் முண்டி (Salvator Mundi) எனும் ஓவியமே உலகில் அதிக விலைக்கு (450 மில்லியன் டாலர்) ஏலம்போன கலைப்பொருளாகும்.
இடதுகைப் பழக்கமுடைய இவர் மோனா லிசா (Mona Lisa), சால்வேட்டர் முண்டி (Salvator Mundi), இறுதி விருந்து (The Last Supper), வெள்ளைக் கீரியுடன் ஒரு பெண் (Lady with an Ermine) போன்ற பல புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்துள்ளார். டாவின்சி ஒரு சைவ உணவு உண்பவராக இருந்தார். மேலும் சிறுவயது முதலே ஒவியம் தீட்டுவதில் திறமைமிக்கவராகவும் இருந்தார். தான் வாழ்ந்த காலத்திலேயே தனது படைப்புகளுக்கான உரிய அங்கிகாரத்தையும் பெற்றார் டாவின்சி.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Leonardo da Vinci quotes in Tamil
- பயன்படுத்தப்படாததால் இரும்பு துருப்பிடிக்கிறது. தேங்கி நிற்பதால் நீர் அதன் தூய்மையை இழக்கிறது. அதே போலவே செயலற்ற தன்மை மனதின் வீரியத்தைக் குறைக்கிறது.
- ஞானம் இல்லாத ஒரு புத்திசாலி மனிதன், வாசனை இல்லாத ஒரு அழகான பூவைப் போன்றவன்.
- நீங்கள் பார்ப்பதை நீங்கள் நம்பினால் மட்டும் போதாது. நீங்கள் பார்ப்பதை நீங்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும்.
- ஐம்புலன்களும் ஆன்மாவின் அமைச்சர்கள்.
- மற்றவர்களின் வார்த்தைகளை விட அனுபவமே ஒரு உண்மையான வழிகாட்டியாகும்.
- நான் ஏழை இல்லை. அதிகமாக ஆசைப்படுபவர்களே ஏழைகள்.
- உங்கள் நண்பரை இரகசியமாக கண்டியுங்கள், வெளிப்படையாக புகழுங்கள்.
- இயற்கை தன் சட்டங்களை ஒருபோதும் மீறாது.
- உங்களுக்குப் புரியாத விடயத்தைப் புகழ்வது தவறானது, குறைகூறுவது மோசமானது.
- காதல் இல்லாத வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை.
- நேராக நடப்பவர் அரிதாகவே விழுகிறார்.
- கூச்சல் இருக்கும் இடத்தில் உண்மையான அறிவு இல்லை.
- ஒழுக்கமே நமது உண்மையான செல்வம்.
- நீங்கள் நினைப்பதை விட உங்கள் மூளை மிகவும் சிறப்பானது, அதைப் பயன்படுத்துங்கள்.
- யார் மீதும் நம்பிக்கை வைக்காதவன் ஒருபோதும் ஏமாறமாட்டான்.
- ஒரு நாளில் பணக்காரனாக விரும்புகிறவன் ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான்.
- தீமையை தண்டிக்காமல் இருப்பது அதை அங்கீகரிப்பதற்குச் சமமாகும்.
- துன்பம் வரும் நேரங்களில் சிரிக்கக்கூடியவர்களை நான் நேசிக்கிறேன்.
- என் உடல் மற்ற உயிரினங்களுக்கு கல்லறையாக இருக்காது.
- நன்றாகச் செலவழிக்கப்பட்ட நாள் மகிழ்ச்சியான தூக்கத்தைத் தருவதைப் போல, நன்றாகப் பயன்படுத்தப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தைத் தருகிறது.
- வாழ்க்கையை மதிக்காதவன் அதற்குத் தகுதியற்றவன்.
- மனிதன் உண்மையிலேயே மிருகங்களின் அரசன்தான், ஏனெனில் அவனின் கொடூரத்தனம் மிருகங்களையே மிஞ்சியது.
- ஒரு ஓவியர் தனது மனம் மற்றும் கைகளில் பிரபஞ்சத்தை வைத்திருக்கிறார்.
- ஒரு மனிதனின் கொலையை மனிதர்கள் இன்று எப்படிப் பார்க்கிறார்களோ அதே போலவே ஒரு விலங்கின் கொலையையும் மனிதர்கள் பார்க்கும் ஒரு நாள் வரும்.
- தீமையை எதிர்க்காதவன், அதைச் செய்யும்படி கட்டளையிடுகிறான்.
- நீங்கள் தனியாக இருந்தால், நீங்கள் முழுவதுமாக உங்களுக்கே சொந்தம்.
- விறகு அதை எரிக்கும் நெருப்புக்கு உணவளிக்கிறது.
- தீமையை எதிர்த்து முதலிலேயே போராடுவது இறுதியில் போராடுவதை விட எளிதானது.
- ஒரு தவறான மனிதனைப் பற்றி நன்றாகப் பேசுவது, ஒரு நல்ல மனிதனைப் பற்றி தவறாகப் பேசுவதைப் போன்றது.
- ஞானம் என்பது அனுபவத்தின் மகள்.
- நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும்.