கலீல் ஜிப்ரானின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

கலீல் ஜிப்ரானின் பொன்மொழிகள்

Khalil Gibran

லெபனானில் (Lebanon) பிறந்து பின்நாளில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த உலகப் புகழ்மிக்க எழுத்தாளரும், கவிஞரும் மற்றும் ஓவியரும்தான் கலீல் ஜிப்ரான் (Khalil Gibran). தனது படைப்புகளை ஆரம்பத்தில் அரபு மொழியில் எழுதிவந்த இவர் பிற்காலத்தில் ஆங்கிலத்தில் எழுதினார்.

இவர் எழுதிய தீர்க்கதரிசி எனும் பொருள்படும் தி ப்ராஃபெட் (The Prophet) எனும் புத்தகம் அதிகமாக விற்பனையாகி சாதனைபடைத்த புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் இவரது கவிதைகளும் ஓவியங்களும் கூட உலகப் புகழ் வாய்ந்த படைப்புகளாகும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Khalil Gibran quotes in Tamil


  • உங்கள் துக்கம் உங்களை எவ்வளவு ஆழமாகச் செதுக்கியிருக்கிறதோ அவ்வளவு ஆழமாகதான் உங்கள் மகிழ்ச்சியும் உங்களை நிரப்ப முடியும்.


  • எனது நாட்களை நான் தங்கத்துக்கு விற்பதில்லை என்பதற்காக அவர்கள் என்னை பைத்தியக்காரன் என்று எண்ணுகிறார்கள், என் நாட்களுக்கு ஒரு விலை உண்டு என்று அவர்கள் நினைப்பதால் நான் அவர்களை பைத்தியக்காரர்கள் என்று எண்ணுகிறேன்.


  • முயல்களை விட ஆமைகளால் சாலையைப் பற்றி உங்களுக்கு அதிகமாக சொல்ல முடியும்.


  • இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உங்களிலும், உங்களோடும், உங்களுக்காகவும் உள்ளன.


  • நான் அதிகமாக பேசுபவரிடமிருந்து மெளனத்தையும், சகிப்புத்தன்மையற்றவர்களிடமிருந்து சகிப்புத்தன்மையையும், இரக்கமற்றவர்களிடமிருந்து இரக்கத்தையும் கற்றுக்கொண்டேன்.


  • எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதால் எங்களுக்கு பதற்றம் வருவதில்லை, ஆனால் அதைக் கட்டுப்படுத்த விரும்புவதால் பதற்றம் வருகிறது.


  • ஒரு நாள் நீ என்னிடம் எனது உயிரா? அல்லது உனது உயிரா? எது முக்கியம் என்று கேட்பாய். நான் என்னுடையது என்று சொல்வேன், நீதான் என் உயிர் என்று தெரியாமல் நீ விலகிச் செல்வாய்.


  • பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது.


  • எல்லோராலும் கேட்க முடியும், ஆனால் உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.


  • நான் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் ஏற்றுக்கொண்டால், இடி மற்றும் மின்னலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


  • ஒரு நபரின் இதயத்தையும் மனதையும் புரிந்துகொள்வதற்கு, அவர் ஏற்கனவே சாதித்ததைப் பார்க்காமல், அவர் எதை அடைய ஆசைப்படுகிறார் என்பதைப் பாருங்கள்.


  • மற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு மனிதனின் மிக உன்னதமான மற்றும் அழகான முடிவாகும்.


  • நீங்கள் புகழும் போது வெட்கப்படும், இகழும் போது மெளனமாகவும் இருப்பவனே மனிதர்களில் சிறந்தவன்.


  • அவன் தேடும் வாழ்க்கை அவனுக்குள் இருக்கிறது என்பதை அறியாமல். மனிதன் தனக்கு வெளியே வாழ்க்கையை கண்டுபிடிக்க போராடுகிறான்.


  • நீங்கள் யாருடன் சிரித்தீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடலாம், ஆனால் நீங்கள் யாருடன் அழுதீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.


  • ஒரு மனிதனின் உண்மையான செல்வம் இந்த உலகில் அவன் செய்யும் நன்மைகளாகும்.


  • நாம் நமது இன்ப துன்பங்களை அவற்றை அனுபவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தேர்வு செய்கிறோம்.


  • ஒரு பூவைப் போல இருங்கள், உங்கள் முகங்களை சூரியனை நோக்கி திருப்புங்கள்.


  • நேற்று என்பது இன்றைய நினைவு, நாளை என்பது இன்றைய கனவு.


  • பருவகாலங்களின் துணையின்றி வளர்ந்து, பூக்கும் ஒரே மலர் காதல்.


  • நான் என் வலியை பொறுமை எனும் வயலில் விதைத்த போது அது மகிழ்ச்சி எனும் பழத்தைத் தந்தது.


  • உங்கள் நண்பரானவர் நீங்கள் அன்போடு விதைத்து, நன்றியுடன் அறுவடை செய்யும் உங்கள் வயல்.


  • நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றின் முடிவை நீங்கள் அடையும்போது, நீங்கள் உணர வேண்டியவற்றின் தொடக்கத்தில் இருப்பீர்கள்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.