ஹென்றி டேவிட் தோரேவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
ஹென்றி டேவிட் தோரேவின் பொன்மொழிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், தத்துவஞானியும், கவிஞரும் மற்றும் எழுத்தாளரும்தான் ஹென்றி டேவிட் தோரே (Henry David Thoreau). இவர் எழுதிய புத்தகமான வால்டன் (Walden) எனும் பிரபலமான நூல் மூலம் அனைவராலும் அறியப்படுகிறார்.
மேலும் இவர் இயற்கை மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரின் அரசியல் சார்ந்த எழுத்துகள் அன்றைய அரசியலிலும் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரின் வால்டன் எனும் படைப்பை மையமாக வைத்து 2017 இல் Walden, a Game எனும் ஒரு கணினி விளையாட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Henry David Thoreau quotes in Tamil
- தனியாகச் செல்லும் மனிதன் இன்றே தொடங்கலாம், ஆனால் இன்னொருவருடன் பயணம் செய்பவர் மற்றவர் தயாராகும் வரை காத்திருக்க வேண்டும்.
- மகிழ்ச்சி என்பது ஒரு பட்டாம்பூச்சி போன்றது, நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகத் துரத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களை விட்டு தப்பிச் செல்லும், ஆனால் நீங்கள் வேறு விடயங்களில் கவனம் செலுத்தினால், அது மெதுவாக உங்கள் தோளில் வந்து அமரும்.
- நான் தனியாக இருக்க விரும்புகிறேன். தனிமையைப்போல் சிறந்த துணையை நான் கண்டதில்லை.
- எந்தவிதமான சிந்தனையோ அல்லது செயல் முறையோ, அது பழமையானதாக இருந்தாலும், ஆதாரம் இல்லாமல் நம்ப முடியாது.
- ஞானமுள்ள ஒருவருக்கு தண்ணீர் மட்டுமே குடிபானம்.
- உங்கள் கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் செல்லுங்கள். நீங்கள் கற்பனை செய்த வாழ்க்கையை வாழுங்கள்.
- மனிதர்கள் வெற்றியடைவதற்காகவே பிறந்தவர்கள், தோல்வியடைவதற்காக அல்ல.
- வேலையாக இருந்தால் மட்டும் போதாது, எறும்புகளும் அப்படித்தான். கேள்வி என்னவென்றால் நாங்கள் என்ன வேலையாக இருக்கிறோம் என்பதுதான்.
- எல்லா துரதிர்ஷ்டங்களும் அதிர்ஷ்டத்திற்கான ஒரு படிக்கல் மட்டுமே.
- வெற்றி என்பது பொதுவாக அதைத் தேட முடியாத அளவுக்கு அதிக வேலையாக இருப்பவர்களுக்கே வரும்.
- நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எதைக் கவனிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
- எப்போதும் தோல்வியடையாத ஒரே முதலீடு நன்மை மட்டுமே.
- உண்மைகளும் ரோஜாக்களும் அவைகளைச் சுற்றி முட்களைக் கொண்டுள்ளன.
- ஆரோக்கியம் சார்ந்த புத்தகங்களைப் படிக்கும்போது கவனமாக இருங்கள். ஒரு தவறான அச்சுப்பிழையால் நீங்கள் இறக்கக்கூடும்.
- அன்பை விட, பணத்தை விட, புகழை விட, எனக்கு உண்மையைக் கொடுங்கள்.
- கீழ்ப்படியாமையே சுதந்திரத்தின் உண்மையான அடித்தளம். கீழ்ப்படிபவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும்.
- சொர்க்கம் நம் கால்களுக்குக் கீழேயும், நம் தலைக்கு மேலேயும் உள்ளது.
- ஒருவர் தனது கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறி, அவர் கற்பனை செய்த வாழ்க்கையை வாழ முயற்சித்தால், எதிர்பாராத நேரத்தில் அவர் வெற்றியடைவார்.
- அதிகாலை நேர நடைப்பயிற்சி அந்த நாள் முழுவதுக்குமான ஆசீர்வாதமாகும்.
- நாங்கள் அப்பாவிகளாகப் பிறந்தோம். அறிவுரைகளால் நாங்கள் மாசுபடுத்தப்பட்டுள்ளோம்.
- பணத்திற்காக வேலை செய்யும் ஒருவரை வேலைக்கு அமர்த்தாதீர்கள், ஆனால் அந்த வேலையை நேசிப்பதால் அதைச் செய்யும் ஒருவரை வேலைக்கு அமர்த்துங்கள்.
- செல்வம் என்பது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் திறனாகும்.