ஜார்ஜ் ஆர்வெல்லின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
ஜார்ஜ் ஆர்வெல்லின் பொன்மொழிகள்
இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில், இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பிறந்த ஒரு ஆங்கிலேய எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் விமர்சகர்தான் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell). ஜார்ஜ் ஆர்வெல் என்பது இவரது புனைப்பெயராகும். இவரது இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளைர் (Eric Arthur Blair) ஆகும்.
அனிமல் ஃபார்ம் (Animal Farm), டிஸ்டோபியன் (Dystopian), நைண்டீன் எய்டி ஃபோர் (Nineteen Eighty Four) போன்றவை இவரது புகழ்மிக்க படைப்புகளில் சிலதாகும். மேலும் இவரது எழுத்துக்களும் விமர்சனங்களும் பொதுவாக சர்வாதிகாரம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான கருத்துகளாகவே இருந்தன.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
George Orwell quotes in Tamil
- உண்மையான சுதந்திரம் என்பது மற்றவர்கள் கேட்க விரும்பாத ஒன்றைச் சொல்வதற்கான உரிமையாகும்.
- மக்களை அழிக்க மிகவும் ஆற்றல் மிக்க வழி அவர்களின் வரலாற்றைப் பற்றிய அவர்களின் புரிதலை மறுப்பதும் அழிப்பதுமாகும்.
- சரியான சிந்தனைக்கு வெகுமதி கிடைக்கும், தவறான சிந்தனைக்கு தண்டனை கிடைக்கும்.
- கடந்த காலம் அழிக்கப்பட்டது, அழிக்கப்பட்டது மறந்துபோனது, பொய் உண்மை ஆனது.
- அறிவற்றவர்கள் இவ்வளவு அதிக செல்வாக்குப் பெற்றிருப்பது பயமாக இருக்கிறது.
- கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவர் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார். நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துபவர் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்.
- ஒரு வெளிநாட்டிற்கு எதிரான போர், பணக்கார வர்க்கங்கள் அதில் லாபம் ஈட்டப் போகிறோம் என்று நினைக்கும் போதுதான் நடக்கும்.
- நம் காலத்தில் 'அரசியலில் இருந்து விலகி இருத்தல்' என்ற ஒன்றே கிடையாது. எல்லாப் பிரச்சினைகளுமே அரசியல் பிரச்சினைகளாகும்.
- ஒருவர் புரட்சியைப் பாதுகாப்பதற்காக சர்வாதிகாரத்தை நிறுவுவதில்லை, சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக புரட்சியை உருவாக்குகிறார்.
- சர்வாதிகாரக் கண்ணோட்டத்தில், வரலாறு என்பது கற்றுக் கொள்வதற்கு மாறாக உருவாக்கப்பட வேண்டிய ஒன்று.
- சர்வாதிகாரத்தால் சிதைக்கப்படுவதற்கு, ஒருவர் சர்வாதிகார நாட்டில் வாழ வேண்டியதில்லை.
- பணக்காரர்கள் பணமுள்ள ஏழைகள்.
- இந்தக் கணத்தில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர் எப்போதும் வெல்ல முடியாதவரைப் போல் தோன்றுவார்.
- உண்மையான பத்திரிகை என்பது வேறு யாரோ வெளியிட விரும்பாத ஒன்றை வெளியிடுவதாகும். மீதமுள்ளவை வெறும் மக்கள் தொடர்புகள் மட்டுமே.
- உங்கள் எதிரியால் கூறப்பட்டால் உண்மை பொய்யாகிவிடும்.
- ஒரு சர்வாதிகார அரசாங்கத்தின் கீழ் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் என்று நம்புவது தவறானது.
- யதார்த்தம் வேறு எங்கும் இல்லை, மனித மனதில் உள்ளது.
- வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சி என்று கருதாதபோது மட்டுமே மனிதர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
- செய்தி என்பது யாரோ ஒருவர் அச்சிட விரும்பாத ஒன்று, மற்ற அனைத்துமே விளம்பரங்கள்.
- ஒவ்வொரு தலைமுறையும் தன்னை தனக்கு முன் சென்ற தலைமுறையை விட புத்திசாலியாகவும், தனக்கு பின் வரும் தலைமுறையை விட ஞானமுள்ளதாகவும் கற்பனை செய்கிறது.
- ஒரு மில்லியன் டாலர்களை சம்பாதிப்பதற்கான வழி ஒரு மதத்தைத் தோற்றுவித்தலாகும்.
- ஏற்றுக் கொள்வதில் மட்டுமே மகிழ்ச்சி இருக்க முடியும்.