விடாமுயற்சியைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

விடாமுயற்சியைப் பற்றிய பொன்மொழிகள்

Perseverance

வாழ்வில் வெற்றியை நோக்கி ஓடி ஓடி சோர்வடைந்துவிட்டீர்களா?. உங்கள் மீது உங்களுக்கே சந்தேகம் வர தொடங்கிவிட்டதா?. அப்படி என்றால் நிச்சயம் நீங்கள் வெற்றிக்கு மிக அருகில் தான் உள்ளீர்கள். வெற்றிக்கு ஒரு அடி தொலைவில் மட்டுமே நீங்கள் இருந்தாலும் கூட அந்த ஒரு அடியையும் கடந்தால் மட்டுமே வெற்றியச் சுவைக்க முடியும்.

ஒரு பூனை குட்டி போடுவதற்கு இரண்டு மாதங்களே ஆகும். அதுவே ஒரு யானை குட்டி போடுவதற்கு பதினெட்டு மாதங்கள் ஆகும். இது போல் தான் உங்கள் வெற்றியும் சிறிது தாமதம் ஆகலாம். ஆனால் உங்கள் வெற்றி யானை போன்று மிகப் பிரம்மாண்டமானதாக இருக்கும். மாபெரும் வெற்றியடைய வேண்டுமாயின் மாபெரும் உழைப்பைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள், தினமும் வெற்றியை நோக்கி ஒரு அடியவது எடுத்து வையுங்கள். மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மீண்டும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருங்கள். விடாமுயற்சி எனும் மந்திரச் சாவியால் மட்டுமே வெற்றி எனும் கதவைத் திறக்க முடியும்.

தன்னம்பிக்கை எனும் வாகனமும் விடாமுயற்சி (Perseverance) எனும் எரிபொருளும் உங்களிடம் இருந்தால் போதும், வெற்றி எவ்வளவு தொலைவில் இருந்தாலும், உங்களால் வெற்றி எனும் இலக்கை சென்றடைய முடியும். நீங்கள் எவ்வளவு தட்டியும் கதவு திறக்கவில்லை என்றால் விரக்தியில் வீழ்ந்துவிடாதீர்கள். கதவை உடைத்தெறிந்துவிட்டு உங்கள் இலக்கை நோக்கி சென்றுகொண்டே இருங்கள்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Perseverance quotes in Tamil


  • அனைத்து வெற்றிகரமான நபர்களிடமும் இருக்கும் ஒரே குணம் விடாமுயற்சி என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. --ஜாய்ஸ் பிரதர்ஸ்


  • பொறுமை மற்றும் விடாமுயற்சியால் மிகப்பெரிய சிரமங்களைக் கூட கடந்து வர முடியும். --அபிகாயில் ஆடம்ஸ்


  • அனைத்து வெற்றிகளுக்குமான ரகசியம் விடாமுயற்சி. --விக்டர் ஹ்யூகோ


  • நான் விரும்பியதை அடையும் வரை, நான் இலக்கிலிருந்து ஒருபோதும் வெளியேறப்போவதில்லை. --தாமஸ் அல்வா எடிசன்


  • இலட்சியமே வெற்றிக்கான பாதை. விடாமுயற்சியே அதை அடைவதற்கான வாகனம். --பில் பிராட்லி


  • நீங்கள் ஏற்கனவே கடினமாக உழைத்து சோர்வடைந்த பிறகும் நீங்கள் செய்யும் கடின உழைப்பே விடாமுயற்சியாகும். --நியூட் கிங்ரிச்


  • நமது விதி நாம் எத்தனை முறை தடுமாறி விழுந்தோம் என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுவதில்லை, நாம் எத்தனை முறை எழுந்திருக்கிறோம், நம்மை தூசி தட்டிவிட்டு முன்னேறிச் செல்கிறோம் என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. --டயட்டர் ஃப்ரெட்ரிக் உச்ச்தோர்ஃப்


  • வாழ்க்கையின் தோற்றவர்கள் பலர், அவர்களின் முயற்சியைக் கைவிட்டபோது அவர்கள் வெற்றிக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை உணராதவர்கள். --தாமஸ் அல்வா எடிசன்


  • முயற்சிப்பதை நிறுத்தாத வரை நீங்கள் எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை. --கன்பூசியஸ்


  • முயற்சியின்றி யாரும் வெற்றியடைய மாட்டார்கள். வெற்றி பெற்றவர்கள் விடாமுயற்சிக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். --ரமண மகரிஷி


  • விடாமுயற்சி உங்கள் இயந்திரமாக இருக்கட்டும் மற்றும் நம்பிக்கை உங்கள் எரிபொருளாக இருக்கட்டும். --எச். ஜாக்சன் பிரவுன், ஜூனியர்


  • வெற்றி பெற்ற தொழில் முனைவோரையும், வெற்றி பெறாத தொழில் முனைவோரையும் வேறுபடுத்துவது "விடாமுயற்சி" என்று நான் நம்புகிறேன். --ஸ்டீவ் ஜாப்ஸ்


  • உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் கடினமான முடிவுகளில் ஒன்று விலகிச் செல்வதா அல்லது கடினமாக முயற்சி செய்வதா என்பதைத் தேர்ந்தெடுப்பது. --ஜியாட் கே. அப்தெல்நூர்


  • விடாமுயற்சியானது குறைத்து மதிப்பிட முடியாத ஒரு நல்லொழுக்கமாகும். --பாப் ரிலே


  • எங்கள் மிகப்பெரிய பலவீனம் கைவிடுதலில் உள்ளது. வெற்றி பெறுவதற்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயற்சிப்பதாகும். --தாமஸ் அல்வா எடிசன்


  • என் இலக்கை நோக்கி என்னை அழைத்துச் சென்ற ரகசியத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். என் வலிமை என் விடாமுயற்சியில் மட்டுமே உள்ளது. --லூயிஸ் பாஸ்டர்


  • வாய்ப்புகள் பொதுவாக கடின உழைப்பைப் போல மாறுவேடமிட்டுள்ளன, எனவே பெரும்பாலான மக்கள் அவற்றை அடையாளம் காண மாட்டார்கள். --ஆன் லாண்டர்ஸ்


  • ஒரு உபாயத்தை முயற்சிப்பதே பொது அறிவு. அது தோல்வியுற்றால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள் மேலும் மற்றொன்றை முயற்சி செய்யுங்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். --பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்


  • விடாமுயற்சியானது வெற்றியின் மிகச்சிறந்த அம்சமாகும். நீங்கள் போதுமான அளவு நேரம் மற்றும் போதுமான அளவு சத்தமாக கதவைத் தட்டினால், நீங்கள் யாரையாவது எழுப்புவது உறுதி. --ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ


  • முயற்சி செய்பவருக்கு சாத்தியமற்றது என்று எதுவுமில்லை. --மாவீரன் அலெக்சாண்டர்


  • தனது குறியைத் தவறவிட்ட வில்லாளன் இலக்கைக் குறை கூற மாட்டான். அவன் நிறுத்தி, தன்னைத்தானே திருத்திக்கொண்டு மீண்டும் எய்கிறான். --கன்பூசியஸ்


  • நீங்கள் நினைத்த எதையும் உங்களால் செய்ய முடியும், ஆனால் அதற்கு செயல், விடாமுயற்சி மற்றும் அச்சங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் என்பன தேவை. --கில்லியன் ஆண்டர்சன்


  • நீங்கள் வாழ்க்கையில் வெற்றியடைய விரும்பினால், விடாமுயற்சியை உங்கள் ஆருயிர் நண்பனாக்குங்கள். --ஜோசப் அடிசன்


  • உங்களிடம் எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால், வெற்றி நிச்சயம் வரும். --சுவாமி விவேகானந்தர்


  • போராட்டம் எவ்வளவு கடினமானதாக இருக்கிறதோ, வெற்றி அவ்வளவு மகிமைமிக்கதாக இருக்கும். --தாமஸ் பெயின்


  • வெற்றியாளர்கள் ஒருபோதும் முயற்சியைக் கைவிடமாட்டார்கள், முயற்சியைக் கைவிட்டவர்கள் ஒருபோதும் வெல்ல மாட்டார்கள். --வின்ஸ் லோம்பார்டி


  • ஒருபோதும் முயற்சியே செய்யாதவரை விட போராடுபவர் சிறந்தவர். --சுவாமி விவேகானந்தர்


  • தியாகம் செய்யாமல் மற்றும் விடாமுயற்சி இல்லாமல் வெற்றிகரமாக இருக்கும் யாரையும் நீங்கள் கண்டுபிடிக்கப் போவதில்லை. --லூ ஹோல்ட்ஸ்


  • நீரோட்டத்துக்கும் பாறைக்கும் இடையிலான மோதலில், நீரோட்டமே எப்போதும் வெற்றி பெறுகிறது, வலிமையால் அல்ல, விடாமுயற்சியால். --எச். ஜாக்சன் பிரவுன், ஜூனியர்


  • நாம் ஒரு இலக்கை அடைய முயற்சிக்கும்போது மட்டுமே நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். --அரிஸ்டாட்டில்


  • நீங்கள் முயற்சியை கைவிடவில்லை என்றால், உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் சிறியவராக இருக்கும்போது மிகவும் கவனமாகவும் உங்கள் மூளையை நம்பியும் இருக்க வேண்டும், உங்கள் வலிமையை அல்ல. --ஜாக் மா


  • பெரும் விடாமுயற்சி கொண்டவருக்கே வெற்றி சொந்தமானது. --நெப்போலியன் போனபார்ட்


  • வெற்றியானது ஆர்வம், மனதை ஒருமுகப்படுத்தல், விடாமுயற்சி மற்றும் சுய மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து வருகிறது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்




உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.