எமினெம்மின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
எமினெம்மின் பொன்மொழிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞரும் (Rapper), பாடலாசிரியரும், பாடல் தயாரிப்பாளரும் மற்றும் நடிகரும் தான் எமினெம் (Eminem). இவரது இயற்பெயர் மார்ஷல் புரூஸ் மாதர்ஸ் III (Marshall Bruce Mathers III) என்பதாகும். பொதுவாக எமினெம் எனும் பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறார்.
இவரது இசைத்தட்டுக்கள் பல விற்பனையில் சாதனை படைத்துள்ளன. சொல்லிசையில் எமினெம் ஒரு முடிசூடா மன்னன் என்றே சொல்லலாம். மேலும் இவர் பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். குறிப்பாக 2003 ஆம் ஆண்டிற்கான சிறந்த அசல் பாட்டிற்கான ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார்.
மேலும் இவர் நடிகராகவும் த வாஷ் (The Wash), 8 மைல் (8 Mile) போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதில் குறிப்பாக 8 மைல் எனும் திரைப்படம் எமினெம்மின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். அதில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Eminem quotes in Tamil
- வெறுமனே நீங்கள் நீங்களாகவே இருங்கள், நீங்கள் நீங்களாகவே இருக்கத் தொடங்கும் நிமிடமே நீங்கள் வெற்றியடைவீர்கள்.
- இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் அடைவதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது.
- நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதையே சொல்கிறேன், மேலும் நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே செய்கிறேன். மக்கள் அதற்காக உங்களை நேசிப்பார்கள் அல்லது அதற்காக உங்களை வெறுப்பார்கள்.
- காதல் என்பது வெறும் வார்த்தை மட்டுமே, ஆனால் நீங்கள் தான் அதற்கு பொருள் கொடுக்கிறீர்கள்.
- ஒவ்வொரு வெற்றிகரமான நபருக்குப் பின்னாலும் அவரை வெறுப்பவர்களின் கூட்டம் உள்ளது.
- உங்களால் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது செய்ய முடியும், அது வெறுமனே உங்கள் உத்வேகத்தைப் பொறுத்தது.
- பணம் தான் மனிதனை வேடிக்கையாக செயற்பட வைக்கிறது.
- நான் என்ன வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சொல்கிறேன்.
- அனைத்தும் எப்போதும் ஒரு காரணத்திற்காக நடக்கிறது.
- இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதை வீணாக்காதீர்கள். ஏனெனில் அனைத்தும் எப்போது முடிந்து போகும் என்று உங்களுக்குத் தெரியாது.
- பிரச்சனையிலிருந்து தப்பிக்க நான் எல்லா நேரமும் வேலை செய்கிறேன்.
- கடவுள் எனக்கு அளித்த திறமைக்காக நான் நன்றி கூறுகிறேன், அவர் என்னை படைத்த சூழலுக்காக நான் நன்றி கூறுகிறேன்.
- நான் ஒரு புத்திசாலியான சிறுவன், ஆனால் நான் பள்ளிக்கூடத்தை வெறுத்தேன்.
- ஒரு டன் செங்கற்கள் என்னைத் தாக்குவது போல புகழ் என்னைத் தாக்கியது.
- யாரும் தோல்வியடைவதற்கு விரும்புவதில்லை. நான் செய்யும் அனைத்திலும் நான் வெற்றிபெற விரும்புகிறேன்.
- நான் பெண்களை வெறுக்கவில்லை, அவர்கள் சில சமயங்களில் என்னை பைத்தியமாக்குகிறார்கள்.
- எனக்கு அதில் ஆர்வம் இல்லையெனில், என்னால் அதை எழுத முடியாது. என்னால் அதை போலியாக செய்ய முடியாது.
- என் பாடல்களில் நான் என்ன சொல்லி இருந்தாலும், ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது கை வைப்பது சரியானதல்ல.
- இனவெறியை நிறுத்துவதற்கு ராப் இசைதான் முக்கியமானது என சில நேரங்களில் நான் உணர்கிறேன்.
- வாழ்நாளில் வாய்ப்பு ஒரு முறை மட்டுமே கூட வரலாம்.
- நான் ஒன்பதாம் வகுப்பில் மூன்று முறை தோல்வியடைந்தேன், ஆனால் அது அவசியமானது என்று நான் நினைக்கவில்லை.
- எனக்காக எப்படி பேச வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது, ஏனெனில் உண்மையில் எனக்கு நம்பிக்கையோ ஆலோசனையோ கொடுக்கும் ஒரு தந்தை இல்லை.
- என் அம்மாவுக்கு வேலை இல்லாததால் நாங்கள் முன்னும் பின்னுமாக நகர்ந்து கொண்டே இருந்தோம். நாங்கள் இருந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டோம். நாங்கள் ஒரு வீட்டில் வாழ்ந்த அதி கூடிய காலம் ஆறு மாதங்கள் தான் என்று நான் நினைக்கிறேன்.