அரிஸ்டாட்டிலின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
அரிஸ்டாட்டிலின் பொன்மொழிகள்
கிரேக்க தத்துவஞானிகளில் ஒருவரும், பிளேட்டோவின் சீடரும் மற்றும் மாவீரன் அலெக்சாண்டரின் குருவும் தான் அரிஸ்டாட்டில் (Aristotle). மேலும் இவர் கவிதை, இசை, நாடகம், அரசியல், உயிரியல் போன்ற பல்வேறு துறைகளிலும் புலமை வாய்ந்தவராக திகழ்ந்தார்.
உலகின் மூன்று தலைசிறந்த தத்துவஞானிகளில் சாக்ரடீஸ், பிளேட்டோவிற்கு அடுத்தபடியாக அரிஸ்டாட்டில் மிகவும் புகழ்வாய்ந்த ஒருவராவார். மிகச்சிறந்த மாணவனாகவும் அதே நேரத்தில் மிகச்சிறந்த ஆசிரியராகவும் தனது கடமையை சிறப்பாகச் செய்து முடித்தவர் அரிஸ்டாட்டில்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Aristotle quotes in Tamil
- தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன்.
- அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் என்று யாருமே இல்லை. காலமே அனுபவத்தை உருவாக்குகிறது.
- நாம் ஒரு இலக்கை அடைய முயற்சிக்கும்போது மட்டுமே நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
- புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள்.
- மேன்மை என்பது ஒரு விபத்தல்ல. அது எப்போதும் உயர்ந்த எண்ணம், நேர்மையான முயற்சி மற்றும் புத்திசாலித்தனமான செயல்பாட்டின் விளைவாகும்.
- உங்களை நீங்களே அறிய, உங்களுடன் நீங்களே நேரத்தை செலவிட வேண்டும், தனியாக இருப்பதற்கு நீங்கள் பயப்படக்கூடாது. உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும்.
- அமைதி போரை விட மிகவும் கடினமானது.
- யார் வேண்டுமானாலும் கோபப்படலாம் அது எளிதானது, ஆனால் சரியான நபருடன், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்திற்காக, சரியான முறையில் கோபப்படும் ஆற்றல் அனைவருக்கும் இல்லை மற்றும் அது எளிதானது அல்ல.
- உங்கள் மகிழ்ச்சி உங்களை மட்டுமே சார்ந்துள்ளது.
- தைரியமே அனைத்து நல்லொழுக்கங்களுக்கும் தாய், ஏனெனில் அது இல்லாமல், நீங்கள் மற்றவற்றை தொடர்ந்து செய்ய முடியாது.
- இயற்கை ஒரு நோக்கம் இல்லாமல் எதையுமே உருவாக்காது.
- அடிமைத்தனத்தைப் பற்றிய மிக மோசமான விடயம் என்னவென்றால், இறுதியில் அடிமைகளே அதை விரும்புவார்கள்.
- கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை.
- உடலை குணப்படுத்துவதற்கு முன் நீங்கள் முதலில் மனதைக் குணப்படுத்த வேண்டும்.
- ஒருவர் தான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிந்திருப்பது மட்டுமே போதாது, அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதையும் கூட அறிந்திருக்க வேண்டும்.
- தனது அச்சங்களை வென்றவரே உண்மையிலேயே சுதந்திரமாக இருப்பார்.
- சரியான இடத்தில், சரியான நபருக்கு எதிராக, சரியான விதத்தில், சரியான நேரத்தில், சரியான கால அளவில் கோபப்படும் மனிதனை நாங்கள் போற்றுகின்றோம்.
- நீங்கள் ஏதோ ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களால் அதைக் கற்பிக்க முடிகிறது என்பதே ஆதாரம்.
- குணத்தை வடிவமைப்பதில் இசைக்கு நிறைய பங்கு இருப்பதால், அதை நாம் நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.
- வலியின்றி நம்மால் கற்றுக்கொள்ள முடியாது.
- கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளாதவன் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது.
- காதல் என்பது இரண்டு உடல்களில் வசிக்கும் ஒற்றை ஆத்மாவால் ஆனது.
- ஆன்மாவின் உணர்வுகளை இசை நேரடியாகப் பிரதிபலிக்கிறது. ஒருவர் தவறான இசையைக் கேட்டால், அவர் தவறான நபராக மாறுவார்.
- அனைவருக்கும் நண்பராக இருப்பவர் யாருக்கும் நண்பரல்ல.
- தீய மனிதர்கள் பயத்தால் கீழ்ப்படிகிறார்கள். நல்ல மனிதர்கள் அன்பினால் கீழ்ப்படிகிறார்கள்.
- மகிழ்ச்சி என்பது நல்லொழுக்கத்திற்கான வெகுமதி.
- நீங்கள் எதையாவது புரிந்துகொள்ள விரும்பினால், அதன் ஆரம்பத்தையும் அதன் வளர்ச்சியையும் கவனியுங்கள்.
- அதிகாலையில் எழுந்திருப்பது நல்லது, ஏனெனில் இதுபோன்ற பழக்கங்கள் ஆரோக்கியம், செல்வம் மற்றும் ஞானத்தை அடைய உதவுகின்றன.
- புழுக்கள் இந்தப் பூமியின் குடல்கள்.
- நீண்டகால பழக்கத்தால் உள்வாங்கப்பட்டதை வாதத்தால் மாற்றி அமைப்பது சாத்தியமற்றது அல்லது எளிதானது அல்ல.
- முதலில் நாங்கள் உண்மைகளைப் புரிந்துகொள்வோம், பிறகு நாங்கள் காரணத்தைத் தேடலாம்.
- தன்னைத் தவிர வேறு யாரும் தேவையில்லாத எவரும் மிருகம் அல்லது கடவுள்.
- நம் நண்பர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதைப்போலவே நாம் நம் நண்பர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.
- இயற்கையாகவே எல்லா மனிதர்களும் அறிவை விரும்புகிறார்கள்.
- மனிதன் இலக்கைத் தேடும் ஒரு விலங்கு. அவன் தனது இலக்குகளை அடைய முயற்சித்தால் மட்டுமே அவனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
- வாழ்க்கையை ஒரே நேரத்தில் வாழவும் மற்றும் புரிந்துகொள்ளவும் முடியாது.
- உள்ளுணர்வே அறிவியல் அறிவின் ஆதாரம்.