பெண்களைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்
கடவுளுக்கு தன் தொழிலை மீண்டும் மீண்டும் செய்து சலிப்புற்றுப் போனதால், தன் உயிர்களைப் படைக்கும் சக்தியை பெண்களிடம் கொடுத்து அவர்களைப் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனால் தான் என்னவோ கடவுளைப் போல பெண்களையும் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. ஆனால் புரிந்துகொள்வதற்கு பெண்கள் (Woman) ஒன்றும் விஞ்ஞானக் கோட்பாடு அல்ல. புரிந்துகொள்வதற்கு முயற்சிப்பதை நிறுத்திவிட்டு அவர்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த உலகில் அறிவில்லாத பெண்களைக் கூட பார்க்க முடியும். ஆனால் அன்பில்லாத ஒரே ஒரு பெண்ணைக் கூட பார்க்க முடியாது ஏனெனில் பெண்கள் அன்பே வடிவானவர்கள், அன்பு என்பது அவர்களின் அடிப்படை இயல்பு. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ளது வேறுபாடே தவிர ஏற்றத்தாழ்வு அல்ல. சில விடயங்களில் ஆண்கள் பெண்களை விட சிறந்தவர்கள். சில விடயங்களில் பெண்கள் ஆண்களை விட சிறந்தவர்கள்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Woman quotes in Tamil
- பெண்களின் உளவியல் பற்றி நான் முப்பது வருடங்களாக ஆராய்ச்சி செய்த போதிலும், இன்னும் என்னால் பதிலளிக்க முடியாத பெரும் கேள்வி "ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும்?" என்பதுதான். --சிக்மண்ட் பிராய்ட்
- ஆண்கள் மாறிவிடுவார்கள் என்று நம்பி பெண்கள் ஆண்களைத் திருமணம் செய்கிறார்கள். பெண்கள் மாறமாட்டார்கள் என்று நம்பி ஆண்கள் பெண்களைத் திருமணம் செய்கிறார்கள். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- நாளை எழுந்ததும் பெண்கள் அனைவரும் தங்கள் உடலை மிகவும் விரும்புவதற்கு முடிவு செய்துவிட்டால், எத்தனை தொழில்கள் வணிகத்திலிருந்து வெளியேறிவிடும் என்று எண்ணிப் பாருங்கள். --கெயில் டைன்ஸ்
- நீங்கள் ஒரு ஆணை படிக்கவைத்தால், நீங்கள் ஒரு ஆணை படிக்கவைக்கிறீர்கள். நீங்கள் ஒரு பெண்ணை படிக்கவைத்தால், நீங்கள் ஒரு தலைமுறையை படிக்கவைக்கிறீர்கள். --பிரிகாம் யங்
- உங்களால் ஒரு பெண்ணைச் சிரிக்க வைக்க முடிந்தால், உங்களால் அவளை எதையும் செய்ய வைக்க முடியும். --மர்லின் மன்றோ
- ஒரு பெண் உங்கள் நிழல் போன்றவள், அவளைப் பின்தொடர்ந்தால், அவள் தப்பி ஓடுகிறாள், அவளிடமிருந்து தப்பி ஓடினால், அவள் உங்களைப் பின் தொடர்கிறாள். --நிக்கோலஸ் சாம்ஃபோர்ட்
- தன் தாயை மதிக்கும் அல்லது தன் சகோதரியை நேசிக்கும் எந்த ஒரு ஆணும் எந்தப் பெண்ணையும் இழிவாகப் பேச முடியாது, அவள் எவ்வளவு தாழ்ந்தவளாக தோன்றினாலும், இன்னும் அவள் ஒரு பெண் தான். ஒவ்வொரு ஆணும் இதை நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். --விக்டோரியா உட்ஹுல்
- கடவுள் நிச்சயமாக பெண்களுக்கு முன்பே ஆண்களைப் படைத்துள்ளார், ஆனால் தலைசிறந்த படைப்பை உருவாக்குவதற்கு முன்பு நீங்கள் எப்போதும் ஒரு வரைபடத்தை உருவாக்குகிறீர்கள். --ராபர்ட் ப்ளோச்
- ஒரு பெண் காதலிக்க அதிக நேரமும் வெறுக்க சில வினாடிகளும் எடுக்கிறாள். ஆனால் ஒரு ஆண் காதலிக்க சில வினாடிகளும் வெறுக்க அதிக நேரமும் எடுக்கிறான். --வில்லியம் ஷேக்ஸ்பியர்
- ஒரு ராணியைப் போல சிந்தியுங்கள். ஒரு ராணி தோல்விக்கு பயப்படுவதில்லை. தோல்வி என்பது மேன்மைக்கான இன்னொரு படிக்கல்லாகும். --ஓப்ரா வின்ஃப்ரே
- ஒரு ஆண் பிரசங்கத்தில் சொல்வதை விட ஒரு பெண் பெருமூச்சில் அதிகம் சொல்ல முடியும். --அர்னால்ட் ஹால்டேன்
- ஒரு இனத்தின் உண்மையான மதிப்பு அந்த இனப் பெண்களின் குணத்தை வைத்து அளவிடப்பட வேண்டும். --மேரி மெக்லியோட் பெத்துன்
- பெண்கள் எப்பொழுதும் ஆண்கள் மறக்கும் விடயங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள், ஆண்கள் எப்பொழுதும் பெண்கள் நினைவில் வைத்திருக்கும் விடயங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். --ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
- தாங்கள் பாராட்டப்படவில்லை என்று உணரும்போது மட்டுமே பெண்கள் தொல்லை கொடுப்பார்கள். --லூயிஸ் டி பெர்னியர்ஸ்
- பிற பெண்களுக்கு உதவி செய்யாத பெண்களுக்கு நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு. --மேடலின் ஆல்பிரைட்
- பழிவாங்குவதிலும் காதலிலும், ஆணை விட பெண் அதிக காட்டுமிராண்டித்தனம் உடையவள். --பிரெட்ரிக் நீட்சே
- ஒரு பெண்ணின் கடந்தகால காதல், தங்கள் மீதான அன்பைக் குறைக்கும் என்று நினைக்கும் ஆண்கள் பொதுவாக முட்டாள்கள் மேலும் பலவீனமானவர்கள். --மர்லின் மன்றோ
- ஒரு முட்டாளின் முட்டாள்தனத்திற்கு ஏற்ப நீங்கள் பதிலளிப்பதைப் போல, சில சமயங்களில் நீங்கள் ஒரு பெண்ணின் பெண்மைக்கு ஏற்ப பதிலளிக்க வேண்டும். --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
- பெரும்பாலான பெண்கள் ஒரு ஆணை மாற்ற முயற்சி செய்கிறார்கள், அவனை மாற்றியவுடன் அவர்கள் அவனை விரும்புவதில்லை. --மார்லின் டீட்ரிச்
- மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முயற்சிக்காத பெண்களே பொதுவாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பெண்கள். --வில் ஸ்மித்
- பாசம் காட்டுவதில் ஆண்கள் கஞ்சர்கள், பெண்கள் வள்ளல்கள். --அல்போன்ஸ் டி லாமர்டைன்
- நிச்சயமாக நான் ஒரு பெண், மேலும் நான் அதை இரசிக்கிறேன். --மர்லின் மன்றோ
- ஒரு பெண் அழும் போது அவளை நம்பாதே, ஏனென்றால் விரும்பியதை அடைவதற்காக அழுவது அவளுடைய இயல்பு. --சாக்ரடீஸ்
- பெண்கள் நேசிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டார்கள், புரிந்து கொள்ளப்படுவதற்காக அல்ல. --ஆஸ்கார் வைல்ட்
- பெண்கள். அவர்கள் ஒரு முழுமையான மர்மம். --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்
- கடினமான பெண்கள் என்று யாரும் இல்லை, மென்மையான ஆண்கள் மட்டுமே உள்ளார்கள். --ராகுல் வெல்ச்
- ஆண்களும் பெண்களும் சில சமயங்களில் வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்று முட்டாளுக்கும் தெரியும், ஆனால் மிகப்பெரிய வித்தியாசம் இதுதான்: ஆண்கள் மறந்துவிடுவார்கள், ஆனால் மன்னிக்க மாட்டார்கள். பெண்கள் மன்னித்துவிடுவார்கள், ஆனால் மறக்க மாட்டார்கள். --ராபர்ட் ஜோர்டான்
- தனது பெண்பாலினத்தை தாக்கும் ஒரே விலங்கு மனிதன் மட்டுமே. --ஜீனி கன்
- உங்கள் அம்மாவிடம் ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி ஒரு பெண்ணை நடத்துங்கள். --மரியோ லோபஸ்
- நீங்கள் ஏதோ ஒன்றை சொல்ல விரும்பினால், ஒரு ஆணிடம் கேளுங்கள், நீங்கள் ஏதோ ஒன்றை செய்ய விரும்பினால், ஒரு பெண்ணிடம் கேளுங்கள். --மார்கரெட் தாட்சர்
- ஒவ்வொரு பெண்ணின் வெற்றியும் இன்னொருவருக்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்போது நாம் பலமாக இருக்கிறோம். --செரீனா வில்லியம்ஸ்