இம்மானுவேல் கான்ட்டின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

இம்மானுவேல் கான்ட்டின் பொன்மொழிகள்

Immanuel Kant

ஜெர்மனியைச் (German) சேர்ந்த உலகின் புகழ் வாய்ந்த தத்துவஞானிகளில் ஒருவர்தான் இம்மானுவேல் கான்ட் (Immanuel Kant). மேலும் இவர் பல தத்துவ நூல்களையும் எழுதியுள்ளார். தத்துவம் மட்டுமல்லாது அறிவியல் தொடர்பாகவும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

மேற்கத்திய சிந்தனைகளில் இம்மானுவேல் காந்தின் செல்வாக்கு ஆழமாக உள்ளன. அறிவியல், அரசியல், ஆன்மீகம் மற்றும் சமூகம் சார்ந்த பல தத்துவக் கருத்துக்களை இவர் கூறியுள்ளார். இந்தப் பதிவில் இவரின் புகழ் மிக்க பொன்மொழிகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Immanuel Kant quotes in Tamil


  • விஞ்ஞானம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு. ஞானம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை.


  • ஒரு புத்திசாலியால் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியும், பிடிவாத குணம் உள்ளவனால் ஒருபோதும் முடியாது.


  • விலங்குகளிடம் கொடூரமாக நடந்துகொள்ளும் மனிதன், மனிதர்களுடனான நடவடிக்கைகளிலும் கடுமையாக நடந்துகொள்கிறான். ஒரு மனிதன் விலங்குகளை நடத்தும் விதத்தை வைத்து அவனது இதயத்தை மதிப்பிடலாம்.


  • பொறுமை என்பது பலவீனமானவர்களின் பலம், பொறுமையின்மை என்பது பலமானவர்களின் பலவீனம்.


  • உன்னிப்பாகக் கவனியுங்கள். அழகானது சிறியதாகக் கூட இருக்கலாம்.


  • ஒரு பொய் என்பது பொய்தான், அது நல்ல நோக்கத்துக்காகவோ அல்லது கெட்ட நோக்கத்துக்காகவோ சொல்லப்பட்டாலும் அது இயல்பாகவே தீயதுதான்.


  • சரியானதைச் செய்யுங்கள், ஏனெனில் அது சரியானது.


  • நீதி அழிந்துவிட்டால், பூமியில் மனித வாழ்க்கை அதன் அர்த்தத்தை இழந்துவிடும்.


  • பெரும்பாலான ஆண்கள் தங்கள் அறிவை மற்றவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு தங்கள் சொந்த பகுத்தறிவு திறன்களைப் பயன்படுத்தி சுயாதீனமாக சிந்திக்க தைரியம் இல்லை. உண்மையைக் கண்டறிவதற்கு அறிவுசார்ந்த தைரியம் தேவை.


  • நிலையான ஒரே விடயம் மாற்றம் மட்டுமே.


  • முதிர்ச்சி என்பது ஒருவர் தனது சொந்த புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதற்கான தைரியமாகும்.


  • ஒரு மனிதனாக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவதே மிகச்சிறந்த மனித தேடலாகும்.


  • நிரந்தர அமைதி கல்லறையில் மட்டுமே உள்ளது.


  • மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவன் இயற்கையாகவே முதிர்ச்சியற்றவனாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் இருக்கிறான்.


  • நல்ல கல்வியின் மூலம் தான் உலகில் உள்ள அனைத்து நன்மைகளும் உருவாகின்றன.


  • முதிர்ச்சியற்ற தன்மை என்பது வேறொருவரின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒருவர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த முடியாமை ஆகும்.


  • இந்த உலகமே அழிந்துவிடும் என்றாலும், சரியானதைச் செய்யுங்கள்.


  • ஒரு மனிதன் அடிக்கடி பேச்சுப் பொருளாக இருந்தால் விரைவில் அவன் விமர்சனப் பொருளாக ஆகிறான்.


  • கடவுளிடம் பேச ஆசைப்படுவது அபத்தமானது. நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒருவரிடம் நம்மால் பேச முடியாது - கடவுளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது, நாம்மால் அவரை நம்ப மட்டுமே முடியும்.


  • நாம் எவ்வளவு அதிகமாக விலங்குகளுடன் தொடர்பு கொள்கிறோமோ மற்றும் அவற்றின் நடத்தைகளைக் கவனிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவற்றை நேசிக்கிறோம்.


  • வாழும் போது நான் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று அவசியமில்லை, ஆனால் வாழும் வரை நான் கௌரவத்துடன் வாழ வேண்டியது அவசியம்.


  • மகிழ்ச்சிக்கான மூன்று நிபந்தனைகள் - உங்களிடம் செய்வதற்கு ஒரு வேலை இருந்தால், நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்களுடன் இருந்தால், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.


உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.