பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் பொன்மொழிகள்
ஐக்கிய அமெரிக்காவின் 32 வது குடியரசுத் தலைவரும், அமெரிக்காவில் அதிக முறை (நான்கு முறை) குடியரசுத் தலைவராக தெரிவான ஒரே தலைவரும்தான் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt). இவர் மொத்தமாக 4,422 நாட்கள் குடியரசுத் தலைவராக பதவி வகித்துள்ளார். இதனால் ஐக்கிய அமெரிக்காவில் அதிக நாட்கள் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தவர் என்ற பெருமை இவரையே சாரும்.
இவர் பதவி ஏற்கும் போது அமெரிக்காவில் பெருளாதார வீழ்ச்சியும், வேலையில்லா திண்டாட்டமும் காணப்பட்டது. பதவி ஏற்பு விழாவில் இவர் ஆற்றிய "நாம் பயப்பட வேண்டிய ஒரே விடயம் பயம் மட்டுமே" என்ற உரை மிகப் பிரபலமான உரைகளில் ஒன்றாகும். பொருளாதாரத்தில் வீழ்ந்திருந்த அமெரிக்காவை மீட்ட மிகத் திறமை வாய்ந்த தலைவர் இவராவார். இன்று அமெரிக்கா உலகின் சக்திவாய்ந்த நாடாக இருப்பதற்கு காரணமானவர்களில் இவரும் ஒருவராவார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Franklin D. Roosevelt quotes in Tamil
- தன்னைத் தானே அதிகமாக மதிப்பிடும் ஒரு மனிதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
- அமைதியான கடல்கள் ஒரு நல்ல மாலுமியை உருவாக்காது.
- முன்னோக்கிச் செல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் தேங்கி நிற்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
- சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரிப்பதை ஏற்காத எந்த ஜனநாயகமும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது.
- ஒரு தனிநபராக செயல்பாடும் மனிதரால் சாதிக்க முடியாத விடயங்களை ஒரு குழுவாக இணைந்து செயல்படும் மக்களால் சாதிக்க முடியும்.
- மீண்டும் மீண்டும் கூறுவதால் ஒரு பொய் உண்மையாக மாறாது.
- தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பதல்ல, மாறாக பயத்தை விட வேறு ஏதோ ஒன்று முக்கியம் என்று தீர்மானித்தல்.
- நாம் பயப்பட வேண்டிய ஒரே விடயம் பயம் மட்டுமே.
- அரசியலில் எதுவும் தற்செயலாக நடக்காது. அப்படி நடந்தால், அது அவ்வாறு திட்டமிடப்பட்டது என்று நீங்கள் பந்தயம் கட்டலாம்.
- நமது மக்களாட்சியில் அரசாங்க அதிகாரிகள் சேவகர்களாக இருக்கிறார்கள், ஒருபோதும் மக்களுக்கு எஜமானர்களாக இல்லை.
- அன்பின் மதிப்பு எப்பொழுதும் வெறுப்பின் மதிப்பை விட வலிமையானதாக இருக்கும்.
- நம் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை நம்மால் தயார் செய்ய முடியாமல் போகலாம், ஆனால் நம்மால் குறைந்தபட்சம் எதிர்காலத்திற்காக நம் குழந்தைகளைத் தயார் செய்ய முடியும்.
- ஒரு ஜனநாயகத்தைப் பாதுகாக்க பத்திரிகைச் சுதந்திரம் அவசியம், ஆனால் சுதந்திரத்திற்கும் உரிமத்திற்கும் வித்தியாசம் உள்ளது.
- தனது தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவை விட குறைவாக ஊழியம் வழங்கும் எந்த வணிகத்திற்கும் இந்த நாட்டில் வணிகத்தைத் தொடர எந்த உரிமையும் இல்லை.
- மனித நாகரிகம் நிலைத்திருக்க வேண்டுமானால், மனித உறவுகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் - அனைத்து வகையான மக்களும், ஒன்றாக ஒரே உலகில் அமைதியாக வாழும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு பழமைவாதி என்பவர் இரண்டு நல்ல கால்கள் கொண்ட ஒரு மனிதன், இருப்பினும், எப்படி முன்னோக்கி நடக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளவில்லை.
- தங்களின் தெரிவை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யத் தயாராக இல்லாவிட்டால் ஜனநாயகம் வெற்றிபெறாது. எனவே ஜனநாயகத்தின் உண்மையான பாதுகாப்பு அரண் கல்வி.
- தொடுவானத்திற்கு அப்பால் ஒரு சிறந்த வாழ்க்கை, ஒரு சிறந்த உலகம் இருக்கிறது என்ற நம்பிக்கையை நாங்கள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறோம்.
- எந்த ஒரு அடக்குமுறையும், எந்த ஒரு அநீதியும், எந்த ஒரு வெறுப்புணர்வும், நம் நாகரிகத்தை தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- மனிதர்கள் விதியின் கைதிகள் அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் மனதின் கைதிகள் மட்டுமே.
- நீங்கள் மக்களை சரியாக நடத்தினால் தொண்ணூறு சதவீத நேரம் அவர்கள் உங்களை சரியாக நடத்துவார்கள்.
- அமெரிக்காவின் தலைவிதி எந்த ஒரு தனிமனிதனையும் சார்ந்து இருக்க முடியாது. அமெரிக்காவின் மகத்துவம் கொள்கைகளினால் கட்டமைக்கப்பட்டுள்ளது, எந்த ஒரு தனிமனித ஆளுமையிலும் இல்லை.
- ஒரு உபாயத்தை முயற்சிப்பதே பொது அறிவு. அது தோல்வியுற்றால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள் மேலும் மற்றொன்றை முயற்சி செய்யுங்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள்.
- நான் உலகின் புத்திசாலித்தனமான மனிதன் அல்ல, ஆனால் என்னால் நிச்சயமாக புத்திசாலித்தனமான சக ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.