சார்லி சாப்ளினின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்

Sir Charles Spencer Chaplin

ஒருவரின் சிரிப்புக்கு காரணமாக இருப்பது மாபெரும் பாக்கியம். அதுவே நம் வேலையாக இருந்தால் நாம் எவ்வளவு பாக்கியசாலியாக இருப்போம். மேலும் மக்களை சிரிக்க வைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனாலும் மேதைகளுக்கு அது ஒன்றும் கடினமான காரியமும் அல்ல, அப்படிப்பட்ட மகத்தான காரியத்தைச் செய்த மாபெரும் கலைஞன்தான் சார்லி சாப்ளின் (Charlie Chaplin).

நகைச்சுவை என்பது இன்றைய காலகட்டத்தில் மற்றவர்களை கேலி கிண்டல் செய்வதுதான் என்றாகிவிட்டது. ஆனால் மற்றவர் மனதை புண்படுத்தாது ஏன் ஒரு வரி வசனம் கூட பேசாது இந்த உலகையே சிரிக்க வைத்தை மாமேதை சார்லி சாப்ளின். இவர் ஹிட்லரை எதிர்த்து எடுத்த தி கிரேட் டிக்டேடர் (The Great Dictator) என்ற திரைப்படத்தை ஹிட்லரே இருமுறை பார்த்தாராம் அதுவே இவரது திறமைக்கு எடுத்துக்காட்டு.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Charlie Chaplin quotes in Tamil


  • நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் வானவில்லைக் காணமாட்டீர்கள்.


  • இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை - நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை.


  • புத்திசாலித்தனத்தை விட, எங்களுக்கு அன்பும் கருணையுமே தேவை.


  • என் வலி ஒருவரின் சிரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் என் சிரிப்பு ஒருபோதும் ஒருவரின் வலிக்குக் காரணமாக இருக்கக்கூடாது.


  • நாங்கள் மிக அதிகமாக சிந்திக்கிறோம், மிகக் குறைவாகவே உணர்கிறோம்.


  • நீங்கள் சிரிக்காத ஒரு நாள் நீங்கள் வீணாக்கிய நாள்.


  • கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை.


  • வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதை விட கலைப்படைப்புகளிலேயே சரியான உண்மைகள் மற்றும் விவரங்கள் அதிகம் உள்ளன.


  • உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதுதான் ரகசியம்.


  • தனக்குச் சமமானவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள், தன்னைவிட தாழ்ந்தவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து அவனை மதிப்பிடுங்கள்.


  • எளிமை என்பது எளிதான விடயம் அல்ல.


  • நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாராலும் பார்க்க முடியாது.


  • உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களைப் பற்றி சிந்தியுங்கள், இல்லையெனில் இந்த உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்.


  • அனைவரிடமும் மகத்துவம் இருக்கிறது.


  • தீங்கு விளைவிக்கும் ஒன்றைச் செய்ய விரும்பினால் மட்டுமே உங்களுக்கு அதிகாரம் தேவை, இல்லையெனில் எல்லாவற்றையும் செய்ய அன்பு மட்டுமே போதுமானது.


  • நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது.


  • ஒரு மனிதனின் உண்மையான குணம் அவன் குடித்ததும் வெளியே வரும்.


  • என் உதடுகளுக்கு என் பிரச்சனை தெரியாது, அவைகள் எப்போதும் புன்னகைக்கின்றன.


  • இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும்.


  • ஒரு நகைச்சுவையை உருவாக்க எனக்கு வேண்டியவை ஒரு பூங்கா, ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு அழகான பெண்.


  • நாம் அனைவரும் நம்மை நாமே இழிவாக நினைக்கின்றோம். அதுதான் இந்த உலகின் பிரச்சனை.


  • ஒரு சிறந்த நடிகரின் இன்றியமையாத அடிப்படை தகுதி அவர் தன்னுடைய நடிப்பை தானே நேசிப்பதாகும்.


  • நான் ஒரு பேரரசராக இருக்க விரும்பவில்லை. அது எனது தொழில் இல்லை. நான் யாரையும் ஆளவோ அல்லது வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை.


  • உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.