வில் ஸ்மித்தின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
வில் ஸ்மித்தின் பொன்மொழிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரும், ராப் இசைப் பாடகரும் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும்தான் வில் ஸ்மித் (Will Smith). மேலும் இவர் ஐந்து முறை தங்கக் கோள் விருதுக்கும் (Golden Globe Awards), இரண்டு முறை ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் நான்கு முறை கிராமி விருதுகளையும் (Grammy Awards) வென்றுள்ளார்.
ஆரம்பத்தில் ராப் இசைக் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய வில் ஸ்மித் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். பின் ஹாலிவுட் படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர் மேன் இன் பிலாக் (Men in Black), இண்டிபெண்டன்ஸ் டே (Independence Day), ஐ ரோபோட் (i robot), பேட் பாய்ஸ் (bad boys) போன்ற பல வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Will Smith quotes in Tamil
- மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்கத் தொடங்கும் போது தான் ஒப்பிடத் தொடங்கிவீர்கள்.
- உங்களுக்கு என்ன வேண்டும், நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள், அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்.
- பயம் உண்மையானதல்ல. பயம் இருக்கக்கூடிய ஒரே இடம் எதிர்காலத்தைப் பற்றிய நம் எண்ணங்களில் மட்டுமே, ஆபத்து மிகவும் உண்மையானது, ஆனால் பயம் ஒரு தேர்வு.
- உங்களுக்காக பெரிதாக எதையும் செய்யாதவர்கள், உங்கள் மனம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதை நிறுத்துங்கள்.
- எனது போராட்டத்தின் போது நீங்கள் என்னுடன் இல்லாதிருந்தால், எனது வெற்றியின் போது நீங்கள் என்னுடன் இருப்பதற்கு எதிர்பார்க்க வேண்டாம்.
- தோல்வியை உங்கள் இதயத்திற்கு செல்ல விடாதீர்கள், வெற்றியை உங்கள் தலைக்கு செல்ல விடாதீர்கள்.
- மற்றவர்களின் வாழ்க்கையை சிறந்ததாக்குவதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும்.
- எந்தவொரு பிரச்சனையையும் எதிர்கொள்ளவும், எந்தவொரு பயத்தையும் அழிக்கவும், எந்தவொரு வலியையும் மறைக்கவும் புன்னகைதான் சிறந்த வழி.
- உங்கள் வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் சக்தி உண்டு.
- எந்தவொரு இலக்கையும் அடைவதற்கான முதல் படி உங்களை நீங்களே நம்புவதாகும். நீங்கள் தோல்வியடையப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அநேகமாக நீங்கள் தோல்வியடைவீர்கள்.
- எனக்கு மிகவும் மதிப்புமிக்கதாக உள்ள விடயங்களை நான் பள்ளியில் கற்கவில்லை.
- கடினமாக உழைக்கும் நபர் வெற்றி பெறுகிறார்.
- பணமும் வெற்றியும் மக்களை மாற்றாது, அவை வெறுமனே ஏற்கனவே இருப்பதை அதிகரிக்கின்றன.
- நான் ஒவ்வொரு நாள் காலையிலும் இன்றைய நாள் நேற்றை விட நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுகிறேன்.
- மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முயற்சிக்காத பெண்களே பொதுவாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பெண்கள்.
- இன்றே நான் முழு சுவரையும் கட்ட வேண்டியதில்லை. ஒரு செங்கல்லை வைத்தால் மட்டும் போதும்.
- என்னால் முடியும் என்று சொல்பவர்கள், என்னால் முடியாது என்று சொல்பவர்கள் - பொதுவாக இருவரும் சரியானவர்களே.
- என்னில் இருக்கும் விரும்பத்தக்க விடயங்களை வெளிப்படுத்தவும், விரும்பத்தகாத விடயங்களை மறைக்கவும் என்னை நானே பயிற்றுவித்தேன்.
- இந்த உலகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ஏனெனில் நான் இங்கே இருக்கின்றேன்.
- நான் உண்மையிலேயே விரும்பினால் என்னால் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
- எனது எல்லைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் எனது மனதை தயார்ப்படுத்தினால், அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன்.