டுவைன் ஜான்சனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
டுவைன் ஜான்சனின் பொன்மொழிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முன்னால் தொழில்முறை மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளரும் மற்றும் தொழிலதிபரும்தான் டுவைன் ஜான்சன் (Dwayne Johnson). மல்யுத்தப் போட்டிகளில் இவர் தி ராக் (The Rock) எனும் பெயரில் பங்குபற்றியதால் அந்தப் பெயராலேயே பெரும்பாலும் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இவர் பல முறை தொழில்முறை மல்யுத்தத்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இவரது பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்த இவர் மல்யுத்தப் போட்டிகளைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். மேலும் தி ஸ்கொர்பியன் கிங் (The Scorpion King), ஜேர்னி 2 (Journey 2), ஹெர்குலஸ் (Hercules) போன்ற பல வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Dwayne Johnson quotes in Tamil
- இன்று அவர்கள் செய்யாததை நாங்கள் செய்கிறோம், எனவே நாளை அவர்களால் முடியாததை நாங்கள் சாதிப்போம்.
- கடின உழைப்புக்கு மாற்றீடு எதுவும் இல்லை. எப்போதும் பணிவாகவும் பசியாகவும் இருங்கள்.
- உங்களால் சாதிக்கக்கூடிய மிக முக்கியமான விடயங்களில் ஒன்று வெறுமனே நீங்கள் நீங்களாகவே இருத்தல்.
- அனைத்து வெற்றிகளும் சுய ஒழுக்கத்திலிருந்து தொடங்குகின்றன, சுய ஒழுக்கம் உங்களிடமிருந்து தொடங்குகிறது.
- நீங்களே உங்களை நம்பாதபோதும் கூட உங்களை நம்பும் நபர்கள் உங்களுடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன்.
- உண்மையிலேயே துணிச்சல்மிக்கவர்கள், ஒருபோதும் பயத்தில் வாழ மாட்டார்கள்.
- நல்லவராகவும், அன்பாகவும் இருப்பது எளிதானது என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அன்பாக இருப்பது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.
- உங்கள் பெயர் என்ன என்பது முக்கியமானதல்ல.
- உங்கள் இலக்கை அடைவதற்கான முதல் படி, உங்கள் இலக்கை மதிப்பதற்கு ஒரு கணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடைவது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- நாங்கள் அனைவருமே சவால்களை விரும்புகிறோம்.
- பல ஆண்டுகளாக நான் கற்றுக்கொண்ட விடயங்கள்தான் என்னை எல்லைகளுக்கு அப்பால் உயர்த்தியது.
- மல்யுத்தம் என்பது எனக்கு ஒரு நகைச்சுவை போன்றது.
- எங்கள் உலகில் நிறைய சத்தங்கள் கேட்கின்றன, ஆனால் நீங்கள் எப்போதுமே கேட்க வேண்டிய குரல் உங்கள் உள்ளுணர்வு, மேலும் நீங்கள் உங்கள் உள்ளுணர்வை நம்பினால், உங்களால் காரியங்களைச் செய்ய முடியும் மற்றும் எல்லைகளுக்கு அப்பால் செல்ல முடியும்.
- உத்வேகம் மற்றும் கொஞ்சம் திறமை இருந்தால், உங்களால் மலைகளை கூட நகர்த்த முடியும்.
- இரத்தம், வியர்வை மற்றும் மரியாதை. முதல் இரண்டையும் நீங்கள் கொடுக்கிறீர்கள். கடைசியை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்.
- நீங்கள் வாய்ப்பு எனும் கதவை நோக்கிச் செல்லும்போது, அதைத் தட்டாதீர்கள். அந்த கதவை உதைத்து, புன்னகையுடன் உங்களை அறிமுகப்படுத்துங்கள்.
- உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.
- 1995 இல் என் சட்டைப் பையில் 7 டொலர் பணம் மட்டுமே இருந்தது மேலும் எனக்கு இரண்டு விடயங்கள் தெரியும்: நான் மிகவும் மனம் உடைந்துவிட்டேன், ஒரு நாள் நான் இப்படி இருக்க மாட்டேன். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.