மாவீரன் அலெக்சாண்டரின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

மாவீரன் அலெக்சாண்டரின் பொன்மொழிகள்

Alexander the Great

இந்த உலகின் பெரும் பகுதியை ஆண்ட மாமன்னனும், தான் பங்கேற்ற எந்தப் போரிலும் தோல்வியடையாத மாவீரனும்தான் மகா அலெக்சாண்டர் (Alexander the Great). போரில் மிகப்பெரும் வெற்றிகளை அலெக்சாண்டரால் பெறமுடிந்ததற்குக் காரணம் அவர் ஒரு மாவீரர் என்பதால் மட்டுமல்ல, அவர் அரிஸ்டாட்டிலிடம் கல்வி பயின்ற ஒரு புத்திசாலி மாணவன் என்பதாலும் தான் அவரால் இவ்வளவு போர் வெற்றிகளைக் குவிக்க முடிந்தது.

விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பது போல் அலெக்சாண்டர் சிறு வயதிலேயே எதற்கும் அஞ்சாதவராகவும், மிகவும் புத்திசாலியாகவும் காணப்பட்டார். யாராலும் அடக்க முடியாத குதிரையை தன் புத்திசாலித்தனத்தால் அடக்கி அந்தக் குதிரையை தன் தந்தையிடமிருந்து பரிசாகப் பெற்றவர் தான் அலெக்சாண்டர். அந்தக் குதிரை தான் அவரின் அனைத்துப் போர்களிலும் அவருக்கு துணையாக இருந்த பூசிஃபலாஸ் எனும் குதிரை.

இந்த உலகில் பலர் வாழ்ந்து மறைவார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டுமே மறைந்த பின்னும் வாழ்வார்கள் அப்படிப்பட்ட ஒரு மாவீரன் அலெக்சாண்டரின் புகழ் மிக்க பொன்மொழிகளை தொகுத்து வழங்குவதில் பெருமையடைகின்றோம். நாங்கள் உங்களிடம் பகிர்ந்ததைப் போல் நீங்களும் உங்கள் நண்பர்களிடம் இந்த பதிவை பகிந்துகொள்ளுங்கள், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Alexander the Great quotes in Tamil


  • உண்மையான காதல் ஒருபோதும் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்காது, ஏனெனில் உண்மையான காதலுக்கு முடிவே இல்லை.


  • நான் வாழ்வதற்காக என் தந்தைக்குக் கடன்பட்டிருக்கிறேன், ஆனால் நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்குக் கடன்பட்டிருக்கிறேன்.


  • ஒரு ஆட்டால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் படைக்கு நான் அஞ்சவில்லை, ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் ஆடுகளின் படைக்கு நான் அஞ்சுகிறேன்.


  • முயற்சி செய்பவருக்கு சாத்தியமற்றது என்று எதுவுமில்லை.


  • எல்லா வெளிச்சமும் சூரியன் அல்ல.


  • நான் பல மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்டிருக்கிறேன்.


  • என் உடலை புதைத்து, எந்த நினைவுச்சின்னத்தையும் கட்டாதீர்கள். என் கைகளை வெளியே வைத்திருங்கள், அதனால் உலகத்தையே வென்றவர் இறந்தபோது அவர் கையில் எதுவுமே இல்லை என்று மக்களுக்குத் தெரியட்டும்.


  • நம்மை நாமே வழிநடத்துவோம், அதனால் எங்கள் நண்பர்களாக இருக்க அனைவரும் விரும்புவார்கள், எங்கள் எதிரிகளாக இருக்க அனைவரும் பயப்படுவார்கள்.


  • ஒரு நீண்ட இழிவான வாழ்க்கையை விட, ஒரு பெருமைக்குரிய குறுகிய வாழ்க்கையை வாழ நான் விரும்புகிறேன்.


  • கடவுள் ஆப்கானியர்களை மிகவும் நேசித்திருக்க வேண்டும் ஏனெனில் அவர் அவர்களை மிகவும் அழகாகப் படைத்துள்ளார்.


  • பல உலகங்கள் உள்ளன, நான் இன்னும் ஒன்றைக் கூட வெல்லவில்லை.


  • உலகம் முழுவதுமே போதுமானதாக இல்லாத அவனுக்கு இப்போது ஒரு கல்லறையே போதுமானது.


  • நான் அலெக்சாண்டராக இல்லாவிட்டால், நான் டியோஜெனெஸாக (கிரேக்க தத்துவஞானி) இருந்திருப்பேன்.


  • நாம் நமது வாளால் பெற்ற எந்த உடைமையாக இருந்தாலும் அது நிச்சயமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்க முடியாது, ஆனால் இரக்கம் மற்றும் அடக்கத்தால் பெறப்பட்ட அன்பு நிச்சயமானது மற்றும் நிரந்தரமானது.


உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.