ரொனால்ட் ரீகனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ரொனால்ட் ரீகனின் பொன்மொழிகள்

Ronald Reagan

முன்னால் ஹாலிவுட் திரைப்பட நடிகரும் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும்தான் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan). ஒரு குறைந்த வருமானமுள்ள ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவர் தனது கடின உழைப்பால் இந்த உயரிய நிலையை அடைந்தார்.

 லவ் இஸ் ஒன் த ஏர் (Love is on the Air), சார்ஜென்ட் மர்பி (Sergeant Murphy), கேர்ல்ஸ் ஒன் ப்ரொபெஷன் (Girls on Probation) போன்ற பல ஹாலிவுட் படங்களிலும் கதானாயகனாக நடித்துள்ளார். ஒரு நடிகனாக ஹாலிவுட்டில் புகழ்பெற்ற பின்பு, அரசியலில் நுழைந்து அதிலும் வெற்றிக் கொடியை நாட்டினார்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Ronald Reagan quotes in Tamil

 

  • எங்களால் எல்லோருக்கும் உதவ முடியாது, ஆனால் எல்லோராலும் யாரோ ஒருவருக்கு உதவ முடியும்.

 

  • எதிர்காலம் மென்மையானவர்களுக்கு சொந்தமானதல்ல. அது துணிச்சல்மிக்கவர்களுக்கு சொந்தமானது.

 

  • அரசாங்கம் வறியவர்களிடமிருந்து திருடி பேராசைக்காரர்களுக்குக் கொடுக்கிறது.

 

  • எளிமையாக வாழுங்கள், தாராளமாக நேசியுங்கள், ஆழமாகக் கவனியுங்கள், கனிவாகப் பேசுங்கள், மீதியை கடவுளிடம் விட்டு விடுங்கள்.

 

  • ஒன்று நீங்கள் உங்கள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவீர்கள், அல்லது அரசாங்கம் உங்களைக் கட்டுப்படுத்தும்.

 

  • ஒரு மிகச்சிறந்த தலைவர் மிகச்சிறந்த விடயங்களைச் செய்பவர் அல்ல. மக்களை மிகச்சிறந்த விடயங்களைச் செய்ய வைப்பவர்.

 

  • உங்களால் அவர்களை ஒளியைக் காண வைக்க முடியாதபோது, அவர்களை வெப்பத்தை உணர வையுங்கள்.

 

  • நாங்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசுவதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் உலகில் நிறைய சிக்கல்கள் மறைந்துவிடும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

 

  • கடவுள் நம் பக்கம் இருப்பதாகக் கூறுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் பதிலளிக்க வேண்டிய உண்மையான கேள்வி என்னவென்றால், நாம் அவருடைய பக்கம் இருக்கிறோமா என்பதுதான் என்று நான் நினைக்கிறேன்.

 

  • அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் ஆனால் தனிநபர் மீதான வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அல்ல, மாறாக அனைவருக்கும் ஒரு பெரிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம்.

 

  • அமெரிக்காவில் அனைத்துப் பெரிய மாற்றங்களும் இரவு உணவு மேசையில் தொடங்குகின்றன.

 

  • சரியானதைச் செய்யுங்கள், நீங்கள் சிலரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள்.

 

  • ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு நோக்கமும் மதிப்பும் இருக்கிறது.

 

  • ஆண்களும் பெண்களும் தங்கள் கனவுகளை சுதந்திரமாகப் பின்பற்றும்போது, வளர்ச்சி மற்றும் மனித முன்னேற்றத்திற்கு எல்லையே இல்லை.

 

  • தற்காப்பு என்பது எங்கள் உரிமை மட்டுமல்ல, அது எங்கள் கடமையுமாகும்.

 

  • பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது, ஆனால் அது நிச்சயமாக உங்களுக்கு சிறந்த நினைவுகளைக் கொடுக்கும்.

 

  • மக்கள் தாமாகவே செய்ய முடியாத விடயங்களை மட்டுமே அரசாங்கம் செய்ய வேண்டும்.

 

  • வாழ்க்கை ஒரு பிரமாண்டமான, இனிமையான பாடல், எனவே இசையை இசைக்கத் தொடங்குங்கள்.

 

  • எங்கள் பிரச்சினைக்கு அரசாங்கம் ஒரு தீர்வல்ல, அரசாங்கமே ஒரு பிரச்சினை.

 

  • சுதந்திரம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரின் உரிமையல்ல, அது கடவுளின் எல்லாக் குழந்தைகளினதும் உலகளாவிய உரிமையாகும்.

 

  • ஜனாதிபதிகள் வந்து செல்வார்கள். வரலாறு வந்து செல்லும், ஆனால் கொள்கைகள் நிலைத்திருக்கும்.

 

  • உங்களால் ஒரு சிக்கலை ஒரு பக்கத்தில் சுருக்கமாகக் கூற முடியாவிட்டால், சிக்கலை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளவில்லை.

 

  • பயங்கரவாதம் என்பது பலவீனமான மற்றும் தீய மனிதர்களின் விருப்பமான ஆயுதமாகும்.

 

  • உங்கள் கனவுகளைப் பற்றிக்கொண்டு, அவற்றை நனவாக்கப் போகிறீர்கள் என்பதை உறுதிசெய்யுங்கள்.


  • மனித வளர்ச்சிக்கு எல்லைகளே இல்லை, ஏனெனில் மனிதனின் புத்திசாலித்தனம், கற்பனை மற்றும் அதிசயத்திற்கு எல்லைகளே இல்லை.


உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.