ஆஸ்கார் வைல்டின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஆஸ்கார் வைல்டின் பொன்மொழிகள்

Oscar Wilde

அயர்லாந்தைச் (Ireland) சேர்ந்த உலக புகழ்மிக்க கவிஞரும், நாடக ஆசிரியரும் மற்றும் எழுத்தாளரும்தான் ஆஸ்கார் வைல்ட் (Oscar Wilde). அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமான நாடக ஆசிரியராகவும், மக்களால் நன்கு அறியப்பட்ட பிரபலமான மனிதராகவும் திகழ்ந்தார். மேலும் இவரது நாடகங்கள் சில இன்றும் கூட அரங்கேற்றப்படுகின்றன.

மேலும் இவர் பல கவிதைகளையும், பல சிறுகதைகளையும் கூட எழுதியுள்ளார். த ஹேப்பி பிரின்ஸ் (The Happy Prince), த செல்பிஸ் ஜயண்ட் (The Selfish Giant) போன்றன இவரது பிரபல சிறுகதைகளாகும். பிரபலமான ஐரிய (Irish) எழுத்தாளர்களின் ஒருவராகத் திகழும் ஆஸ்கார் வைல்டின் பொன்மொழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Oscar Wilde quotes in Tamil

 

  • ஒரு நம்பிக்கையாளர் குவளை பாதி நிரம்பியிருப்பதாக உங்களுக்குச் சொல்வார், ஒரு அவநம்பிக்கையாளர் பாதி வெறுமையாக இருப்பதாகச் சொல்வார் மேலும் ஒரு பொறியாளர் குவளை இருக்க வேண்டிய அளவை விட இரு மடங்கு பெரிதாக இருப்பதாகச் சொல்வார்.

 

  • மதம் என்பது ஒரு இருட்டு அறையில் ஒரு குருட்டு மனிதன் அங்கு இல்லாத ஒரு கருப்புப் பூனையைத் தேடிக் கண்டுபிடிப்பதை போன்றது.

 

  • எல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எல்லோரிடமும் எப்போதும் ஏதேனும் ஒரு நல்லது இருக்கிறது. யாரையும் விரைவில் மதிப்பிடாதீர்கள். ஏனெனில் எந்தவொரு துறவிக்கும் கடந்த காலம் உண்டு மற்றும் எந்தவொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு.

 

  • வாழ்வது என்பது உலகின் மிக அரிதான விடயம். பெரும்பாலான மக்கள் உயிருடன் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.

 

  • அழகு உங்கள் கவனத்தை ஈர்க்கும். ஆளுமை உங்கள் இதயத்தை ஈர்க்கும்.

 

  • எப்பொழுதும் ஒரு அவநம்பிக்கையாளரிடமிருந்து பணம் கடன் வாங்குங்கள். அவர் அதை திரும்ப எதிர்பார்க்க மாட்டார்.

 

  • மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.

 

  • வாய்ப்பு கதவைத் தட்டும்போது அந்த சத்தம் குறித்து குறை கூறுபவரே ஒரு அவநம்பிக்கையாளர்.

 

  • உங்களால் நன்றாக எழுத முடியாவிட்டால், உங்களால் நன்றாகச் சிந்திக்க முடியாது, உங்களால் நன்றாகச் சிந்திக்க முடியாவிட்டால், மற்றவர்கள் உங்களுக்காகச் சிந்திப்பார்கள்.

 

  • எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் இல்லை என்பதை நினைவூட்டுவதற்காகவே பூனைகள் பூமியில் படைக்கப்பட்டுள்ளன.

 

  • உங்கள் பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை நிராகரித்தால் மனந்தளராதீர்கள். பல வருடங்கள் கழித்து அவர்கள் அதை தங்களின் சந்ததியினருக்கு வழங்குவார்கள்.

 

  • பெண்கள் நேசிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டார்கள், புரிந்து கொள்ளப்படுவதற்காக அல்ல.

 

  • கசப்பான சோதனைகள் என நமக்குத் தோன்றுவதெல்லாம் பெரும்பாலும் மாறுவேடமிட்ட ஆசீர்வாதங்கள்.

 

  • நான் சொர்க்கம் செல்ல விரும்பவில்லை. என் நண்பர்கள் யாரும் அங்கு இல்லை.

 

  • கனவுகள் நனவாகும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர் - ஆனால் கெட்ட கனவுகள் கூட கனவுகள்தான் என்பதை குறிப்பிட மறந்துவிட்டார்கள்.

 

  • அனுபவம் என்பது வெறுமனே நம் தவறுகளுக்கு நாம் கொடுக்கும் பெயர்.

 

  • ஒரு ஆண் எந்தப் பெண்ணுடனும் மகிழ்ச்சியாக இருக்க முடியும், அவன் அவளை காதலிக்காதவரை.

 

  • ஒரு நல்ல நண்பர் எப்போதும் உங்களை முன்னால் குத்துவார்.

 

  • உங்களைச் சாதாரண நபர்போல் நடத்தும் யாரையும் காதலிக்காதீர்கள்.

 

  • நன்றாக வாழ்வதே சிறந்த பழிவாங்கல்.

 

  • எந்த மனிதனும் தனது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவுக்கு பணக்காரன் இல்லை.

 

  • வயதானவர்கள் எல்லாவற்றையும் நம்புகிறார்கள், நடுத்தர வயதுடையவர்கள் அனைத்தையும் சந்தேகிக்கிறார்கள், இளைஞர்களுக்கு எல்லாம் தெரியும்.

 

  • சிந்தனை அற்புதமானது, ஆனால் அனுபவம் இன்னும் அற்புதமானது. 

 

  • போரில் வலிமையானவர்கள் பலவீனமானவர்களை அடிமைகளாக்குகிறார்கள், சமாதானத்தில் பணக்காரர்கள் ஏழைகளை அடிமைகளாக்குகிறார்கள்.

 

  • சாதாரண செல்வங்கள் திருடப்படலாம், உண்மையான செல்வங்களைத் திருட முடியாது. உங்கள் ஆன்மாவில் உங்களிடமிருந்து எடுக்க முடியாத எண்ணற்ற விலைமதிப்பற்ற விடயங்கள் உள்ளன.

 

  • காதல் என்பது இரண்டு முட்டாள்களுக்கு இடையிலான தவறான புரிதல்.

 

  • பேச்சாளர் மற்றும் பார்வையாளர் இருவரும் குழப்பமடையும்போது, அந்தப் பேச்சு ஆழமானது.

 

  • சூழ்நிலைகள் ஒருபோதும் கொள்கைகளை மாற்றக்கூடாது.

 

  • ஒன்றும் செய்யாமல் இருப்பது உலகின் மிகக் கடினமான விடயமாகும், மிகவும் கடினமானதும் மற்றும் மிகவும் அறிவார்ந்ததுமாகும்.

 

  • வரலாற்றிற்கு நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை அதை மீண்டும் எழுதுவதுதான்.


  • சிலர் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்கள், மற்றவர்கள் அவர்கள் செல்லும் போதெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்.


உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.