கார்ல் மார்க்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
கார்ல் மார்க்ஸின் பொன்மொழிகள்
ஜெர்மனியைச் (German) சேர்ந்த தத்துவஞானியும், பொருளாதார வல்லுனரும், சமூகவியலாளரும் மற்றும் முதன்முதலில் பொதுவுடைமைக் கொள்கையை முன்வைத்தவரும்தான் கார்ல் மார்க்ஸ் (Karl Marx). மேலும் மார்க்சியம் (Marxism) எனும் மெய்யியல் கோட்பாடு தோன்றக் காரணமானவரும் இவரே. மேலும் அரசியல், பொருளியல் சார்ந்த பல நூல்களையும் எழுதியுள்ளார் கார்ல் மார்க்ஸ். உதாரணமாக மூலதனம் (Capital) என்ற நூல் இவர் எழுதியதுதான்.
இன்றும் பல நாடுகளில் நடக்கும் பல்வேறு போரட்டங்களுக்கும் மார்க்சிய, பொதுவுடைமைக் கருத்துகளே காரணமாக உள்ளன. மேலும் ரஷ்யப் புரட்சிக்கும் இவரது பொதுவுடைமைக் கருத்துகளே காரணமாய் அமைந்தன, இவரது கொளகையைப் பின்பற்றியே விளாதிமிர் லெனின் செயற்பட்டார். மதங்கள் மனிதத்தை வளர்க்காது எனும் கொள்கையைக் கொண்டிருந்த மார்க்ஸ் மதங்களுக்கு எதிராகவும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Karl Marx quotes in Tamil
- மன வலிக்கு ஒரே ஒரு சிறந்த மாற்று மருந்து உள்ளது, அது உடல் வலி.
- ஒரு எழுத்தாளர் வாழ்வதற்காகவும் எழுதுவதற்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆனால் அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக வாழவும் எழுதவும் கூடாது.
- மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள்.
- ஒரு நாட்டின் பாரம்பரியத்தை பறித்துவிடுங்கள், அவர்கள் இன்னும் எளிதாக சம்மதித்துவிடுவார்கள்.
- நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது.
- உங்களால் மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடிந்தால், அவர்களை எளிதில் சம்மதிக்கவைக்க முடியும்.
- முதலாளித்துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும்.
- எனக்கு பணத்தைப் பிடிக்காது, நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம்.
- வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
- அனைத்து வரலாறுகளும் மனித இயல்பின் தொடர்ச்சியான மாற்றத்தைத் தவிர வேறில்லை.
- காரணம் எப்பொழுதும் இருக்கிறது, ஆனால் எப்பொழுதும் நியாயமான வடிவில் இல்லை.
- இசை என்பது யதார்த்தத்தின் கண்ணாடி.
- மனிதர்கள் தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்குகிறார்கள், ஆனால் அவர்களின் விருப்பப்படி அதை உருவாக்கவில்லை.
- பல பயனுள்ள பொருட்களின் உற்பத்தி பல பயனற்ற மக்களை உருவாக்குகிறது.
- ஒவ்வொரு காலகட்டத்தையும் ஆளும் கருத்துக்கள் அதை ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களாகவே இருந்தன.
- ஜனநாயகம் என்பது சமூகவுடைமைக்கான பாதை.
- கம்யூனிசக் கோட்பாட்டை சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் கூறலாம்: அனைத்து தனியார் சொத்துக்களையும் ஒழித்தல்.
- பெண்களின் சமூக நிலையை வைத்து சமூக முன்னேற்றத்தை அளவிட முடியும்.
- மக்களின் மகிழ்ச்சிக்கு முதலில் தேவையானது மதத்தை ஒழிப்பதாகும்.
- பெண்களின் எழுச்சி இல்லாமல் பெரிய சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்று வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரியும்.
- அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும்.
- நான் புத்தகங்களை விழுங்குவதற்காக தண்டிக்கப்பட்ட ஒரு இயந்திரம்.
- உங்களை மகிழ்விக்கும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்திருங்கள். உங்களைச் சிரிக்க வைக்கும் நபர்கள், உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுக்கு உதவி செய்பவர்கள். உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களை உங்கள் வாழ்க்கையில் வைத்திருப்பது மதிப்புக்குரியது.
- நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைப் பிடித்துக் கொடுத்தால், அதை நீங்கள் அவனுக்கு விற்கலாம். நீங்கள் ஒரு மனிதனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால், நீங்கள் ஒரு அற்புதமான வணிக வாய்ப்பைக் கெடுக்கிறீர்கள்.
- மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள்.