ஐசக் நியூட்டனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
ஐசக் நியூட்டனின் பொன்மொழிகள்
இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதவியலாளரும், இயற்பியலாளரும், வானியலாளரும் மற்றும் ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்ததன் மூலம் உலகமெங்கும் புகழ் அடைந்தவரும்தான் ஐசக் நியூட்டன் (Isaac Newton). ஒரு எளிய விவசாயியின் மகனாகப் பிறந்த இவர் தனது கடின உழைப்பாலும், விடாமுயச்சியாலும் இந்த உயரிய நிலையை அடைந்தார். காலங்கள் பல கடந்தாலும் அன்றுபோல் இன்றும் புகழ்மிக்கவராய் விளங்குகிறார் நியூட்டன்.
அறிவியலில் நியூட்டனின் பங்களிப்பு அளப்பெரியது என்றாலும் அவர் இறுதிவரை கடவுள் நம்பிக்கை கொண்டவராகவே காணப்பட்டார். மேலும் ஒரு எழுத்தாளராகவும் பிரின்சிப்பியா (Principia), மெத்தேட் ஆஃப் ஃபிளக்சியான்ஸ் (Method of Fluxions), ஆப்டிக்ஸ் (Opticks) போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். நியூட்டனின் மிகச்சிறந்த பொன்மொழிகளின் தொகுப்பை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Isaac Newton quotes in Tamil
- ஒரு எளிய உண்மையைக் கண்டறிவதற்கு பல ஆண்டுகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
- இரண்டு ஆற்றல்கள் ஒன்றுசேரும்போது, அவற்றின் செயல்திறன் இரட்டிப்பாகும்.
- எனது கருவிகளையும் பொருட்களையும் மற்றவர்கள் செய்துதருவார்கள் என்று காத்திருந்திருந்தால், நான் ஒருபோதும் எதையும் செய்திருக்க முடியாது.
- நமக்குத் தெரிந்தவை ஒரு துளி அளவு, நமக்குத் தெரியாதவை ஒரு கடல் அளவு.
- நான் மற்றவர்களை விட அதிகமாகப் பார்த்திருந்தால், அது மாபெரும் மனிதர்களின் தோள்களில் நிற்பதன் மூலம் தான்.
- நாத்திகம் என்பது மிகவும் புத்தியற்றது. நான் சூரிய மண்டலத்தைப் பார்க்கும்போது, சூரியனிடமிருந்து சரியான அளவு வெப்பத்தையும் ஒளியையும் பெறுவதற்காக பூமியானது சரியான தூரத்தில் உள்ளதைக் காண்கிறேன். இது தற்செயலாக நடக்கவில்லை.
- ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான மற்றும் எதிரான எதிர்ச்செயல் உண்டு.
- தீர்க்கமான அனுமானம் இல்லாமல் பெரிய கண்டுபிடிப்பு எதுவும் நிகழ்த்தப்படவில்லை.
- ஒன்றைப் புரிந்துகொள்ள சிறந்த வழி சில நல்ல உதாரணங்கள்.
- கடின உழைப்பால் என்னை நானே உருவாக்கிக்கொண்டேன்.
- மேலே செல்வது கட்டாயம் கீழே வர வேண்டும்.
- வண்ணங்களைப் பற்றி ஒரு குருடனுக்கு எதுவும் தெரியாததைப் போலவே, எல்லாம் வல்ல கடவுள் அனைத்தையும் உணர்ந்து புரிந்துகொள்ளும் விதம் பற்றி எங்களுக்குத் தெரியாது.
- நான் எப்போதாவது மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தால், அது வேறு எந்த திறமையையும் விட அதிக பொறுமையாக கவனித்ததே காரணம்.
- பிளேட்டோ என் நண்பர், அரிஸ்டாட்டில் என் நண்பர், ஆனால் உண்மையே என் மிகச் சிறந்த நண்பர்.
- கடவுள் அனைத்தையும் எண், எடை மற்றும் அளவு மூலம் படைத்தார்.
- நான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்ந்ததை எனது மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.
- பிழைகள் கலையில் இல்லை, கலைஞர்களில் உள்ளது.
- நான் இந்த உலகிற்கு எப்படித் தோன்றுகிறேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன் மட்டுமே என்று தோன்றுகிறது.
- முழு இயற்கையையும் விளக்குவது எந்தவொரு மனிதனுக்கும் அல்லது எந்த ஒரு வயதினருக்கும் கூட மிகவும் கடினமாக காரியம்.
- ஓய்வில் இருக்கும் ஒரு பொருள் ஓய்வில் இருக்க முனைகிறது. இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருள் இயக்கத்தில் இருக்க முனைகிறது.
- ஈர்ப்புசக்தி கோள்களின் இயக்கங்களை விளக்குகிறது, ஆனால் கோள்களை இயக்கிவிட்டது யார் என்பதை விளக்க முடியாது.