எலோன் மஸ்கின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
எலோன் மஸ்கின் பொன்மொழிகள்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனரும், டெஸ்லா (Tesla Motors) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் (CEO) மற்றும் போரிங் நிறுவனம் (The Boring Company), நியூரலிங்க் (Neuralink), ஒபென்எஐ (OpenAI) ஆகிய நிறுவனங்களின் இணை நிறுவனரும்தான் எலோன் மஸ்க் (Elon Musk).
ஒரு தனி மனிதன் இத்தனை நிறுவனங்களை நிர்வகிப்பதே ஒரு ஆச்சர்யம்தான். மனிதன் பூமியில் மட்டுமல்ல வேறு பல கிரகங்களிலும் வசிக்க வேண்டும் என்பதே எலோன் மஸ்க் (Elon Musk) இன் விருப்பமாகும். மேலும் செவ்வாய்க் கோளில் மனிதர்களைக் குடியமர்த்த வேண்டும் என்பதற்காகவும் தனது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Elon Musk quotes in Tamil
- நீங்கள் காலையில் எழுந்து எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினால், அது ஒரு பிரகாசமான நாள். இல்லையெனில், அது அப்படி இருக்காது.
- பொறுமை ஒரு நல்லொழுக்கமாகும், நான் பொறுமையைக் கற்றுக்கொள்கிறேன். அது ஒரு கடினமான பாடம்.
- ஏதேனும் ஒன்று முக்கியமானதாக இருக்கும்போது, சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் அதைச் செய்யுங்கள்.
- என்னைப் பொறுத்தவரை இது ஒருபோதும் பணத்தைப் பற்றியது அல்ல, ஆனால் மனிதகுலத்தின் எதிர்காலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பற்றியது.
- தொடர்ந்து விமர்சனங்களைத் தேடுங்கள். நீங்கள் செய்வதைப் பற்றி நன்கு சிந்தித்து சொல்லப்பட்ட விமர்சனம் தங்கத்தைப் போல மதிப்புமிக்கது.
- சிறந்த நிறுவனங்கள் சிறந்த தயாரிப்புகளின் மேல் கட்டப்பட்டுள்ளன.
- தமது இலக்கு என்ன, ஏன் இந்த இலக்கு என்று தெரிந்தவுடன் மக்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
- நீங்கள் இணை நிறுவனர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தால், நீங்கள் செய்ய விரும்பாத அனைத்து வகையான பணிகளையும் நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யாவிட்டால், நிறுவனம் வெற்றியடையாது. எந்த வேலையும் கேவலமானது அல்ல.
- செயற்கை நுண்ணறிவால் நாங்கள் அரக்கனை வரவழைக்கிறோம்.
- கடினமான விஷயம் என்னவென்றால், என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று கண்டுபிடித்தலாகும், ஆனால் நீங்கள் அதைச் செய்தவுடன், மீதமுள்ளவை மிகவும் எளிதாகிவிடும்.
- தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு பேஸ்புக் பக்கம் இல்லை. எனது ட்விட்டர் கணக்கை நான் பயன்படுத்துவதில்லை. இரண்டையும் நான் அறிந்திருக்கிறேன், ஆனால் நான் அவற்றைப் பயன்படுத்துவதில்லை.
- என் வாழ்நாளில் மனிதர்கள் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கவில்லை என்றால், நான் மிகவும் ஏமாற்றமடைவேன்.
- நான் கல்லூரியில் படித்தபோது, உலகை மாற்றும் விஷயங்களில் ஈடுபட விரும்பினேன்.
- ஒருவருக்கு நல்ல இதயம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
- உண்மையில் நான் நேரமுகாமைத்துவம் குறித்த எந்த புத்தகங்களையும் படிக்கவில்லை.
- நான் செய்ய முயற்சிப்பது என்னவென்றால் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கான சாத்தியங்களை அதிகரிப்பதாகும்.
- நான் முதுமையடைவதற்கு முன்பே ஓய்வு பெற விரும்புகிறேன், ஏனெனில் நான் முதுமையடைவதற்கு முன்பே ஓய்வு பெறாவிட்டால், அந்த நேரத்தில் நல்லதை விட அதிக சேதம்தான் செய்வேன்.
- விண்வெளிப் போக்குவரத்துச் செலவை நாங்கள் குறைத்தால், எங்களால் சிறந்த விடயங்களைச் செய்ய முடியும்.
- நீங்கள் எங்காவது விமானத்தில் பறக்கும் ஒவ்வொரு முறையும், ஒரு புதிய விமானத்தை வாங்க வேண்டியிருந்தால், அது நம்பமுடியாத அளவுக்கு விலையுயர்ந்ததாக இருக்கும்.
- கைபேசிகள், மடிக்கணினிகள் அல்லது ஏதேனும் புதிய தொழில்நுட்பத்தின் தொடக்கத்தை நீங்கள் நினைத்துப் பார்த்தால், அது எப்பொழுதும் விலை உயர்ந்ததாகவே இருக்கும்.
- பல கிரகங்களைச் சேர்ந்த உயிரினமாக நாம் மாறுவதற்கு ஏற்ற இடம் இந்த சூரிய குடும்பத்தில் செவ்வாய்க் கிரகம் மட்டுமே.