சுவாமி விவேகானந்தரின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

Swami Vivekananda

இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்து சிகாகோவில் நிகழ்த்திய தனது ஆன்மீகச் சொற்பொழிவால் உலகப்புகழ் பெற்ற வீரத்துறவி தான் சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda). சிறு வயது முதலே மிகுந்த புத்திக்கூர்மை உடையவராக இருந்த சுவாமி விவேகானந்தர் தனது கடவுள் குறித்த தேடலால் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார்.

1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் ஆற்றிய உரையின் மூலம் மேலைநாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் பல ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் இளைஞர்களை நேர்மறையாகத்தூண்டி அவர்களை நல்வழிப்படுத்தினார். சுவாமி விவேகானந்தரின் (Swami Vivekananda) பொன்மொழிகள் வாழ்க்கை குறித்த எங்களின் புரிதலை மேலும் அதிகரிக்க உதவும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Swami Vivekananda quotes in Tamil

 

  • நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை ஒரு ஞானி என்று நம்பினால், நாளை நீங்கள் ஒரு ஞானியாக ஆவீர்கள். இங்கே உங்களைத் தடுப்பதற்கு எதுவும் இல்லை.

 

  • இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், ஏனெனில் நீங்கள் எல்லையற்றவர். எல்லாச் சக்தியும் உங்களிடம் உள்ளது. உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

 

  • உங்கள் திறமைகளின் மட்டத்துக்கு உங்கள் இலக்குகளைக் குறைக்காதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் திறமைகளை உங்கள் இலக்குகளின் உயரத்திற்கு உயர்த்துங்கள்.

 

  • ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களுடன் நீங்களே பேசுங்கள், இல்லையெனில் இந்த உலகில் உள்ள ஒரு சிறந்த நபருடனான சந்திப்பை நீங்கள் தவறவிடக்கூடும்.

 

  • அறிவு எனும் பரிசே இந்த உலகின் மிக உயர்ந்த பரிசு.

 

  • வேறுபாடு என்பது பெயரிலும் வடிவத்திலும் மட்டுமே உள்ளது.

 

  • 'என்னால் எல்லாம் செய்ய முடியும்' என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியாக மறுத்தால் ஒரு பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

 

  • மனிதன் கடவுளிடமிருந்து தன்னை வேறுபடுத்தி, உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தவறைச் செய்கிறான்.

 

  • இந்த உடலில் செயற்படும் அனைத்துச் சக்திகளும் உணவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன, நாம் அதை அன்றாடம் காண்கிறோம்.

 

  • இந்த உலகின் வரலாறு என்பது தங்களைத் தாங்களே நம்பிய ஒரு சில மனிதர்களின் வரலாறாகும்.

 

  • எதிர்வினையாற்றியவுடன், நாங்கள் அடிமைகளாக மாறுகிறோம். ஒரு மனிதன் என்னைக் குறை கூறுகிறார், உடனே நான் கோபமாக நடந்துகொள்கிறேன். அவர் உருவாக்கிய ஒரு சிறிய அதிர்வு என்னை அடிமையாக்கியது.

 

  • யாரையும் குறை கூறாதீர்கள், அறிவற்றவர்கள் செய்யும் தவறைச் செய்யாதீர்கள்.

 

  • மனம் என்பது உடலின் சூட்சுமமான பகுதியாகும். நீங்கள் உங்கள் மனதிலும் வார்த்தைகளிலும் பெரும் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

 

  • உண்மையான முன்னேற்றம் என்பது மெதுவானது ஆனால் நிச்சயமானது.

 

  • உங்களுக்கு அறிவு இருந்தால், ஒரு பலவீனமான மனிதரைக் கண்டால், அவரைக் கண்டிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், அவருடைய நிலைக்குச் சென்று அவருக்கு உதவுங்கள். அவர் வளர வேண்டும்.

 

  • உங்கள் சொந்த ஆத்மாவைத் தவிர வேறு ஆசிரியர் இங்கே இல்லை.

 

  • ஒருவர் அரசியல் மற்றும் சமூக சுதந்திரத்தைப் பெறலாம், ஆனால் அவர் தனது உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் அடிமையாக இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் தூய மகிழ்ச்சியை அவரால் உணர முடியாது.

 

  • நீங்கள் தூய்மையானவராக இருந்தால், நீங்கள் வலிமையானவராக இருந்தால், தனி ஒருவரான நீங்கள் இந்த முழு உலகத்துக்குச் சமனானவர்.

 

  • மனதில் தைரியமும், இதயத்தில் அன்பும் உள்ளவர்கள் என்னுடன் வரட்டும். வேறு யாரும் எனக்குத் தேவையில்லை.

 

  • இதயம் எனும் புத்தகம் திறக்கப்பட்டவருக்கு வேறு புத்தகங்கள் தேவையில்லை.

 

  • நீங்கள் விரும்பினால் நாத்திகராக இருங்கள், ஆனால் சந்தேகமின்றி எதையும் நம்பாதீர்கள்.

 

  • நீங்கள் அனைவரும் முதலில் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

  • தீவிர பிணைப்பு ஏற்பட்டவுடன், ஒரு மனிதன் தன்னையே இழக்கிறான், அவன் இனிமேலும் தனக்குத்தானே எஜமானன் அல்ல, அவன் ஒரு அடிமை.

 

  • உடல், மன மற்றும் ஆன்மீக சுதந்திரத்தை நோக்கி முன்னேறுவதும், மற்றவர்களும் அதை அடையச்செய்ய உதவுவதுமே எங்கள் உயர்ந்த கடமையாகும்.

 

  • ஒருபோதும் முயற்சியே செய்யாதவரை விட போராடுபவர் சிறந்தவர்.

 

  • உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் முன்னோர்களைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள்.

 

  • ஆன்மீக வாழ்க்கைக்கு மிகப் பெரிய உதவி தியானம். தியானத்தில் நாம் எல்லாப் பொருட்களிலிருந்தும் விலகி, நம் தெய்வீகத் தன்மையை உணர்கிறோம்.


  • உங்களிடம் எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால், வெற்றி நிச்சயம் வரும்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.