மார்டின் லூதர் கிங்கின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழிகள்
ஐக்கிய அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவர்தான் மார்டின் லூதர் கிங் (Martin Luther King, Jr). வன்முறையற்ற தனது அறப்போராட்டத்தின் மூலம் உலக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் மார்டின் லூதர் கிங்.
நிறவெறிக்கு எதிராக அறவழியில் போராடியதால் 1964 இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங்கின் போராட்டத்துக்குப் பிறகே 1965 இல் கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது அமெரிக்கா.
சிறந்த பேச்சாற்றலால் மக்களின் கவனத்தை ஈர்த்து தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் மார்டின் லூதர் கிங் (Martin Luther King, Jr). "எனக்கொரு கனவு இருக்கிறது" என்ற இவரின் செற்பொழிவு மிகவும் பிரபலமானது. அறவழியில் புரட்சி செய்த மார்டின் லூதர் கிங்கின் கருத்துக்கள் உங்களுக்கு உறுதுணையாக அமையும்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Martin Luther King quotes in Tamil
- உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள், ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள், நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள், ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருங்கள்.
- சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட உலகில் துன்பகரமானது எதுவும் இல்லை.
- இருளை இருளால் விரட்ட முடியாது, ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது, அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
- கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது.
- நாங்கள் அனைவரும் வெவ்வேறு கப்பல்களில் வந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இப்போது ஒரே படகில் இருக்கிறோம்.
- சரியான ஒன்றுக்காக துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். நீதிக்கு துணைநிற்க மறுக்கும்போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். உண்மைக்கு துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான்.
- சிலரின் வன்முறைகள் அல்ல, பலரின் மெளனங்களே என்னைப் பயமுறுத்துகின்றன.
- மனச்சோர்வைக் குணப்படுத்த பத்து வழிகள், வெளியே சென்று யாரோ ஒருவருக்கு ஏதாவது உதவிசெய்யுங்கள், மீண்டும் அதை ஒன்பது முறை செய்யுங்கள்.
- ஒரு நாள் என் நான்கு குழந்தைகளும், அவர்களின் தோலின் நிறத்தை வைத்து அவர்களை மதிப்பிடாமல், அவர்களின் குணத்தை வைத்து அவர்களை மதிப்பிடும் நாட்டில் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உள்ளது.
- முக்கியமான விடயங்களில் நாம் அமைதியாக இருக்கும் நாளிலிருந்து எங்கள் வாழ்க்கை முடிவடையத் தொடங்குகிறது.
- சரியானதைச் செய்வதற்கு, எப்பொழுதுமே சரியான நேரமாகும்.
- எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க சிறந்த வழி, அதற்கான காரணத்தை நீக்குவதாகும்.
- சுதந்திரம் ஒருபோதும் ஒடுக்குவோரால் தானாக முன்வந்து கொடுக்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களால் கோரப்பட வேண்டும்.
- தீய வழிமுறைகளின் மூலம் நீங்கள் நல்ல முடிவுகளை அடைய முடியாது, ஏனென்றால் வழிமுறைகள் விதைகளைப் போன்றது, முடிவு மரத்தைப் போன்றது.
- நான் அன்போடு ஒட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வெறுப்பு என்பது தாங்க முடியாத ஒரு சுமை.
- தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி.
- கண்ணுக்குக் கண் என்ற பழைய தத்துவத்தை என்னால் பின்பற்ற முடியாததற்குக் காரணம் அது அனைவரையும் குருடர்களாக்கிவிடுகிறது.
- வெறுப்பு வெறுப்பை உருவாக்குகிறது, வன்முறை வன்முறையை உருவாக்குகிறது, கடினத்தன்மை அதிக கடினத்தன்மையை உருவாக்குகிறது. வெறுப்பு சக்திகளை நாம் அன்பின் சக்தியுடன் சந்திக்க வேண்டும்.
- இறுதியில் நாங்கள் நினைவில் வைத்திருப்பது எங்கள் எதிரிகளின் வார்த்தைகளை அல்ல, எங்கள் நண்பர்களின் மெளனத்தை.
- நீங்கள் முழு படிக்கட்டுகளையும் பார்க்க வேண்டியதில்லை, வெறுமனே முதல் அடியை எடுத்துவையுங்கள்.
- ஜெர்மனியில் ஹிட்லர் செய்த அனைத்தும் சட்டபூர்வமானவை என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
- ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே.
- புத்திசாலித்தனம் மற்றும் நற்பண்பு இதுவே உண்மையான கல்வியின் குறிக்கோள்.
- நாம் மன்னிக்கும் திறனை வளர்த்து அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் ஆற்றல் இல்லாதவன் அன்பு செய்யும் ஆற்றல் இல்லாதவன்.
- நாம் ஏன் நம் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம், வெறுப்பு நம் ஆன்மாவை காயப்படுத்துகிறது மற்றும் ஆளுமையை சிதைக்கிறது.