சுயத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

சுயத்தைப் பற்றிய பொன்மொழிகள்

Self

அறிவுக் கடலில் நாம் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய பல விடயங்கள் இருந்தாலும், நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது சுயமாகிய நம்மைத்தான். இதைத்தான் திருமூலர் திருமந்திரத்தில்  "தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மனிதனால் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பது எப்படி சாத்தியமில்லையோ அதுபோலவே ஒரு மனிதனால் தன்னைப் பற்றி (Self) முழுமையாக தெரிந்தவராக இருப்பதும் சாத்தியமற்றது. எனவே தான் உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு சிறு புரிதலை ஏற்படுத்த இந்தப் பதிவு.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Self quotes in Tamil


  • முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உங்களைத்தான். தன்னை அறிந்த ஒரு மனிதன் தன்னை விட்டு வெளியில் வந்து, ஒரு பார்வையாளனைப் போல தனது சொந்த எதிர்வினைகளைப் பார்க்க முடியும். --ஆடம் ஸ்மித்


  • உங்களை நீங்களே அறிந்து கொண்டால், நீங்கள் எல்லா போர்களிலும் வெற்றி பெறுவீர்கள். --சுன் சூ


  • எப்பொழுதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள், உங்களை வெளிப்படுத்துங்கள். வெளியில் சென்று வெற்றிகரமான மனிதரை பார்த்து அவரைப் போலவே இருக்க முயற்சிக்காதீர்கள். --புரூஸ் லீ


  • தன்னைத்தானே ஆளக்கூடியவரே மிகவும் சக்திவாய்ந்தவர்.  --செனிக்கா


  • தன் மீது நம்பிக்கை உள்ளவனுக்கு, மற்றவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை. --லாவோ சீ


  • நீங்கள் வெறுமனே நீங்களாகவே இருங்கள், யாரோடும் உங்களை ஒப்பிடவோ, போட்டியிடவோ செய்யாதீர்கள். எல்லோரும் உங்களை மதிப்பார்கள். --லாவோ சீ


  • உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும்போது, இந்த உலகம் முழுவதும் உங்களை ஏற்றுக்கொள்கிறது. --லாவோ சீ


  • வெளியிலிருந்து நம்மை யாரும் ஆள முடியாது. இந்த உண்மை எமக்குத் தெரிந்தவுடன், நாம் சுதந்திரமாகிவிடுகிறோம். --கெளதம புத்தர்


  • தங்களை தாமே நம்பி, யாரிடமும் உதவி எதிர்பார்க்காமல், தங்களுக்கு தாமே உதவிகரமாக இருப்பவர் யாரோ அவரே வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைகிறார். --கெளதம புத்தர்


  • நீங்கள் நினைப்பதை விட நீங்கள் சிறந்தவர். --அன்னை தெரேசா


  • என்னை நான் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். சில நேரங்களில் அது எளிதானதாக இருப்பதில்லை. --மர்லின் மன்றோ


  • உங்களைத் தவிர உங்களுக்கு வேறு யாரும் உதவ முடியாது என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரம் உங்களுக்குள் இருக்கும் போது அதை எப்படி அடைவது என்று என்னால் கூற முடியாது. --புரூஸ் லீ 


  • மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேன். --உசைன் போல்ட் 


  • வெற்றியானது ஆர்வம், மனதை ஒருமுகப்படுத்தல், விடாமுயற்சி மற்றும் சுய மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து வருகிறது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


  • உங்களிடம் இல்லாத விடயங்கள் உங்களிடம் இருப்பதைப் பயன்படுத்துவதைத் தடுக்க விடாதீர்கள். --ஜான் லாக்


  • எல்லா செல்வங்களிலும் மிகவும் விலைமதிப்பற்றது நமக்கு நம்மீதுள்ள அதிகாரமாகும். --ஜான் லாக்


  • நாம் அனைவரும் மற்றவர்களை விட நம்மை நாம் அதிகமாக நேசிக்கிறோம், ஆனால் நம்முடைய கருத்துக்களை விட மற்றவர்களின் கருத்துக்களைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறோம். --மார்கஸ் அரேலியஸ்


  • மற்றவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் இருங்கள், உங்களுடன் நீங்கள் கண்டிப்புடன் இருங்கள். --மார்கஸ் அரேலியஸ்


  • நாம் நம்மை மதிப்பது போல் நம்மை மதிக்கும் ஒரு நபரைக் கண்டறிவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். --ஆடம் ஸ்மித்